என்னை சரியான சீன் பார்ட்டி என்று சொன்னவர் - காதல் மனைவி குறித்து மனம் திறக்கும் விராட்!

நடிகர் விராட்
நடிகர் விராட்

சின்னத்திரையில் கடந்த வாரத்தில் பேசுபொருளான ஜோடி விராட்- நவீனா ஜோடி தான். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அன்பே வா’ சீரியல் மூலம் நிறைய ரசிகைகளை தக்க வைத்திருக்கிறார் விராட். இந்த நிலையில், விராட்டின் திருமணச் செய்தி அவரின் ரசிகைகளுக்கு சற்றே சோர்வை கொடுத்திருந்தாலும் இந்த ஜோடிக்கு தங்கள் வாழ்த்துகளைச் சொல்லி வருகின்றனர்.

மகாபலிபுரத்தில் திருமணம் முடித்த கையோடு வாழ்த்துகளைப் பெற்று பூரிப்பில் இருந்த விராட் - நவீனா ஜோடியிடம் பேசினோம்.

திருமணத்திற்கு வாழ்த்துகள்... நல்ல விஷயம் ஒன்று நடந்தாலே நெகட்டிவிட்டியும் இருக்கும் இல்லையா? அப்படி உங்கள் திருமணம் சுற்றி எழுந்த பேச்சு பற்றி?

விராட்- நவீனா திருமணம்
விராட்- நவீனா திருமணம்

என்னுடைய உண்மையான பெயர் நவீன். சின்ன வயசுல இருந்தே அம்மா என்னை நவீனானுதான் கூப்பிடுவாங்க. இப்போ என்னுடைய மனைவி பெயரும் நவீனா. இப்படி அப்போதிருந்தே எங்களுக்குள்ள எதோ ஒரு கனெக்‌ஷன் இருந்துருக்கு போல! நல்ல விஷயம் நடந்தா பின்னாடியே நெகட்டிவிட்டியும் வருவது இப்போ வழக்கமாகிடுச்சு. நவீனா 19 வயசுலயே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவங்க. அதுக்காக அவங்க மேல ‘டிவோர்சி’ன்னு முத்திரை குத்த வேண்டிய அவசியம் இல்லை.

இதுக்கு முன்னாடி அவங்க வாழ்க்கையில் இருந்த நபர் சரியில்லைன்னா அது நவீனா செஞ்ச தப்பு கிடையாது இல்லையா? எங்களுக்குள்ள நல்ல புரிதல் இருந்ததால, அது ஒரு விஷயமாவே எனக்குத் தெரியலை. எங்க குடும்பத்துலயும் என்னுடைய விருப்பம்ன்னு சொல்லி முழு மனசா ஏத்துக்கிட்டாங்க.

இந்த நெகட்டிவிட்டியை எப்படி கடந்து வந்தீர்கள்?

இதைப்பற்றி யோசித்தால் நம்முடைய நிம்மதிதான் வீணாகும். வாழ்க்கையின் நோக்கமே, பிடிச்சதை செஞ்சு, சந்தோஷமா இருக்கணும். இதை நான் உறுதியாக நம்புவேன். இதையேதான் நவீனாவுக்கும் சொல்வேன். நல்லது நடந்தாலும் அதை கெட்டதாக மாற்ற பேசுபவர்கள் எப்போது என்றாலும் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள். அதனால், அதை எல்லாம் நாம் காதில் வாங்கிக் கொள்ளாக் கூடாது. முக்கியமாக, அவர்களை திருத்த வேண்டும் என்ற விபரீத முயற்சியில் இறங்கக் கூடாது.

உங்கள் காதல் கதை எப்படி தொடங்கியது?

நவீனா, செலிபிரிட்டி மேக்கப் ஆர்டிஸ்ட். பிரபலம் என்ற ரீதியில் ஒருவரை ஒருவர் தெரியும். அதைத் தவிர பெரிதாக முன்பே அறிமுகம் இல்லை. நவீனா என்னைச் சந்திக்கும் முன்பு, “சரியான சீன் பார்ட்டி” என்று என்னைச் சொல்லி வந்தார். நானும் அவர் திமிரான ஆளு என்றுதான் நினைத்தேன். இப்படியே லைட்டா, முட்டல் மோதலில்தான் ஆரம்பித்தோம். பின்பு, ஒரு நாள் நேரில் சந்தித்தோம். ஆன்லைனில் பேசி பழகியதற்கு அப்படியே எதிராக நேரில் அவ்வளவு சந்தோஷமாக பேசினோம். முதல் சந்திப்பில் மட்டும் கிட்டத்தட்ட 6-7 மணி நேரம் பேசியிருப்போம். அதன் பின்புதான் பழக ஆரம்பித்தோம்.

பிரபலங்கள் திருமணம் என்றாலே யூடியூப் வியூவ்ஸ் என்ற வட்டத்திற்குள் சுருங்கிவிட்டது. இந்த பப்ளிசிட்டி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பிரபலங்கள் திருமணம் பற்றி மீடியா மூலமாக அவர்களது ரசிகர்களும் தெரிந்து கொள்கிறார்கள் என்பது நல்லதுதான்! ஆனால், அது ஓவர்டோஸ் ஆவதுதான் இங்கு சிக்கல். திருமணம் பற்றிய புகைப்படங்கள் பகிர்ந்தோமா... மக்களிடம் காதல் கதை சொன்னோமா என்பதோடு நிறுத்திக் கொண்டால் சரி. அதைத் தாண்டி டிஜிட்டல் மீடியாவில் கப்புளாக இன்னும் பிரபலமாக வேண்டும் என்று தங்கள் பிரைவசியை விற்பது தான் தவறு.

மற்றபடி, இந்தப் பிரபல்யத்தை சரியான முறையில் எடுத்துச் சென்றால் அவர்களுக்கும் நல்லது. மக்களும் முகம்சுளிக்க மாட்டார்கள்.

இதையும் வாசிக்கலாமே...


அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... அகவிலைப்படி 25% அதிரடியாக உயர்வு!

இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது... பாகிஸ்தானியர் சர்ச்சை பேச்சு!

கள்ளத்துப்பாக்கி... ரத்தம் படிந்த கோடாரி... கோடநாடு வழக்கில் அதிமுக பிரமுகருக்கு சிக்கல்!

கும்பகோணத்தில் பரபரப்பு... 10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம்... மீட்பு பணிகள் தீவிரம்!

ஷாக்... ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in