#Election2024: அஜித்தை முதல்ல வெளியே அனுப்புங்க... டென்ஷனான சீனியர் சிட்டிசன்!

#Election2024: அஜித்தை முதல்ல வெளியே அனுப்புங்க... டென்ஷனான சீனியர் சிட்டிசன்!

இன்று காலை, நடிகர் அஜித் வாக்களிக்க வந்திருந்த போது, அங்கிருந்த சீனியர் சிட்டிசன் ஒருவர், ‘தான் முதலில் இருக்கும் போது நடிகர் அஜித்தை எப்படி உள்ளே விடலாம்’ என்று அங்கு விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலை நடிகர் அஜித் திருவான்மியூரில் முதல் நபராக தனது வாக்கினைப் பதிவு செய்தார். குறிப்பாக, வாக்குச்சாவடியைத் அதிகாரிகள் திறப்பதற்கு முன்பாகவே அதாவது, 6.40 மணியளவிலேயே வாக்குச்சாவடிக்கு தனது மேலாளர் சுரேஷ் சந்திராவுடன் வந்திருந்தார் அஜித். தனது வாக்கினைப் பதிவு செய்தவர் அங்கு அதிகாரிகளுடனும், செல்ஃபி கேட்ட ரசிகர்களுடனும் இன்முகத்துடன் உரையாடிவிட்டு கிளம்பி சென்றார்னார்.

இதுதான் அங்கு பிரச்சினையை கிளப்பி உள்ளது. அங்கிருந்த சீனியர் சிட்டிசன் ஒருவர், “எனக்கு 83 வயதாகிறது. நான் இங்கு காத்துக் கொண்டிருக்கும் போது நடிகர் அஜித்தை உள்ளே எப்படி அனுப்பலாம்? அவரை முதலில் வெளியே அனுப்புங்கள்” என்று காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கிருந்த காவல்துறையினர் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த முறை தேர்தலில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து வாக்குப்பதிவு செய்தார். ஆனால், இந்தமுறை தனியாகவே வந்து வாக்குப்பதிவு செய்தார்.

இவரைத் தொடர்ந்து நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், தனுஷ், சிவகார்த்திகேயன், யோகிபாபு, விஜய்சேதுபதி உள்ளிட்டப் பலரும் தங்கள் வாக்கினை காலை ஏழு மணியில் இருந்து பதிவு செய்தனர்.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in