பாகிஸ்தானிய நடிகைக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினாரா... சானியா மிர்சாவின் முன்னாள் கணவரைச் சுற்றும் சர்ச்சை!

சோயிப் மாலிக்-நவல் சயீத்
சோயிப் மாலிக்-நவல் சயீத்

முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் சோயிப் மாலிக். இவர் பாகிஸ்தானிய நடிகை நவல் சயீத்துக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக திடீர் சர்ச்சை வெடித்திருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நவல் சயீத்தின் பேச்சும் அமைந்திருக்கிறது.

நவல் சயீத்
நவல் சயீத்

பாகிஸ்தானின் பிரபல சாட் நிகழ்ச்சியான 'லைஃப் கிரீன் ஹை'யின் சமீபத்திய நேர்காணலின் போது, ​​நடிகை நவல் சயீத் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களைப் பற்றி அதிர்ச்சியூட்டும் விஷயங்களைப் பேசினார். இதைத் தொடந்து அவர் கிரிக்கெட்டர் ஷோயப் பற்றித்தான் இப்படிச் சொல்கிறாரா என பலரும் சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை நவல் சயீத், “காதலி இருப்பவர்கள்... ஏன், கல்யாணம் ஆன கிரிக்கெட் வீரர்கள்கூட எனக்கு சமூகவலைதளத்தில் ஆபாசமாக குறுஞ்செய்திகள் அனுப்புவார்கள்" என்று சொல்லி அதிர்ச்சி கொடுத்தார்.

அவர் இப்படிச் சொன்னதும், “பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீம் ஷா அவர்களில் ஒருவரா? என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டார். இதற்கு வெளிப்படையாகப் பதில் சொல்லாமல் மழுப்பலாக சிரித்தார் நவல் சயீத். பின்னர் தொகுப்பாளர், “சோயிப் மாலிக்கா..?” என்று கேட்க, அந்த கேள்வியையும் தவிர்க்கும் விதமாகவே பேசினார் நவல்.

சானியா மிர்சா மற்றும் சனா ஜாவேத் கணவராக சோயிப் மாலிக்
சானியா மிர்சா மற்றும் சனா ஜாவேத் கணவராக சோயிப் மாலிக்

இந்த விஷயம்தான் ரசிகர்களின் சந்தேகத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. “தொகுப்பாளர்களின் கேள்விக்கு ஆமாம், இல்லை என்று சொல்லாமல் நவல் ஏன் இப்படித் தவிர்க்க வேண்டும்? அப்படியானால் அது உண்மைதானா?” எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.

சானியா மிர்சாவை விவாகரத்து செய்த சோயிப் மாலிக், கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். சானியா மிர்சாவுடன் மணவாழ்வில் இருந்தபோதே பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்திடம் நெருக்கம் பாராட்டினார். சானியாவுக்கு துரோகம் செய்தே அவர் அடுத்த திருமண வாழ்வில் நுழைந்திருக்கிறார் என ரசிகர்கள் இந்த ஜோடி மீது அதிருப்தியில் இருந்தனர். இப்போது இந்த விவகாரமும் சோயிப் மீது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...   

குட்நியூஸ்... இந்திய கடற்படையில் 4,108 வேலைவாய்ப்புகள்: ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

அதிர்ச்சி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை; மீட்பு பணி தீவிரம்!

சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்... மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை!

வங்கிக் கணக்கை முடக்குவதாக பாஜக மிரட்டியது... பிரேமலதா பகீர் குற்றச்சாட்டு!

தம்பி அண்ணாமலை, மோதிப் பார்ப்போமா?... சவால் விட்ட சீமான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in