மீண்டும் சொல்லி அடித்த ‘கில்லி’... ரீ-ரிலீஸிலும் வசூலை வாரி குவிக்கும் விஜய்!

மீண்டும் சொல்லி அடித்த ‘கில்லி’... ரீ-ரிலீஸிலும் வசூலை வாரி குவிக்கும் விஜய்!

இன்று ‘கில்லி’ திரைப்படம் ரீ- ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், இப்போதும் இப்படம் வசூல் சாதனை படைத்துள்ளது. இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் விஜய்க்கு சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக 'கில்லி' திரைப்படம் அமைந்தது. இயக்குநர் தரணி இயக்கத்தில் உருவான இப்படம் 2004 ஏப்ரல் 17-ம் தேதி திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'ஒக்கடு' திரைப்படத்தின் ரீமேக்கான 'கில்லி' திரைப்படம், அப்போது ரூ.50 கோடி வசூலித்த முதல் தமிழ்ப்படம் என்கிற சாதனையைப் படைத்தது. இத்திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதால், 4K தரத்தில் இப்படத்தை மீண்டும் இன்று மறுவெளியீடு செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

வித்யாசாகர் இசையமைத்திருந்த இப்படத்தில் ‘அப்படி போடு, அர்ஜுனரு வில்லு ஆகிய பாடல்கள் இன்றுவரை பலரது விருப்பப் பாடலாக உள்ளது. இன்று உலகம் முழுவதும் 'கில்லி' படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சேர்த்து, இப்படம் கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.

தளபதி விஜயின் புதிய படம் ரிலீஸ் ஆனால் எப்படி ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் பட்டாசுகள் வெடித்து திரைப்படத்தை வரவேற்பார்கள் அதே போல் இப்படத்தின் ரீலீஸையும் வரவேற்றுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை வரை ‘கில்லி’ திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ் ஃபுல் ஆகியுள்ளன. முதல் நாள் மட்டும் கிட்டத்தட்ட 7 கோடி வரை இப்படத்துக்கு வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இதுவரை வெளியான ரீ ரிலீஸ் படங்கள் செய்யாத சாதனையாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது.

‘கில்லி’ ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது குறித்து த்ரிஷா தனது எக்ஸ் தளத்தில், 'வாழ்க்கை ஒரு வட்டம். முதல் நாள், முதல் காட்சிக்கு அப்போது இருந்த உற்சாகம் இன்று மீண்டும் கிடைத்துள்ளது' என கூறியுள்ளார்.

தற்போது சமூக வலைதளத்தில் விஜய் ரசிகர்கள் ஆர்பாட்டத்துடன் இப்படத்தை வரவேற்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. விஜய் கபடி வீரராக நடித்திருந்த இப்படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலித்து போகாது என்றும், மீண்டும் திரையரங்கில் பார்ப்பது புதிய அனுபவத்தை கொடுப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர்களுக்கு இடையூறு... நடிகர் விஜய் மீது போலீஸில் புகார்!

என் மகனுக்கு தர்ற தண்டனை ஒரு பாடமாக இருக்க வேண்டும்... மாணவி கொலை வழக்கில் குற்றவாளியின் தந்தை கதறல்!

நடுவானில் வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர்... ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி!

உஷார்... வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல்... தமிழக எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் எல்லையில் நுழைய முயன்ற ட்ரோன்; பிஎஸ்எஃப் அதிரடி நடவடிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in