போதைப்பொருள் கடத்தல் வழக்கு... மகள் வரலட்சுமியைக் காப்பாற்ற பாஜவில் இணைந்தாரா சரத்குமார்?!

வரலட்சுமி- சரத்குமார்
வரலட்சுமி- சரத்குமார்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை அதிரடியாக பாஜகவில் நேற்று இணைத்தார் சரத்குமார். இதன் பின்னணியில் அவரது மகள் வரலட்சுமி தொடர்பான என்ஐஏ வழக்கு இருப்பதாக பரபரக்கிறது அரசியல் வட்டாரம்.  

சரத்குமார்- அண்ணாமலை
சரத்குமார்- அண்ணாமலை

மக்களவைத் தேர்தல் தேதி நெருங்க நெருங்க அரசியல் களத்தில் தினந்தோறும் சுவாரஸ்யங்களும் பரபரப்புகளும் அரங்கேறி வருகின்றன. மதவாத அரசியலுக்கு எப்போதும் துணை போகமாட்டேன் என தொடர்ந்து பேசி வந்த சரத்குமார் ’மக்கள் நலனுக்காகதான் இந்த முடிவு’ என நேற்று தனது கட்சியையே பாஜகவுடன் இணைத்து, தானும் பாஜகவில் ஐக்கியமானார். வழக்கமாக, தேர்தல் சமயத்தில் மற்றொரு கட்சியுடன் கூட்டணிதான் வைப்பார்கள்.

ஆனால், சரத்குமார் இப்படி அதிரடியாக கட்சியை இணைக்க என்ன காரணம் என பரபரத்துக் கிடக்கிறது அரசியல் களம். இதற்கு முக்கிய காரணமாக சரத்குமாரின் மகள் வரலட்சுமியின் என்ஐஏ வழக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு போதை பொருட்கள் மற்றும் பயங்கர ஆயுதம் கடத்தல் தொடர்பான விவகாரத்தில் நடிகை வரலட்சுமியின் பெயர் அடிபட்டது நினைவிருக்கலாம். இது குறித்து நேரில் ஆஜராகவும் கூறியிருந்தார்கள்.

சரத்குமார், வரலட்சுமி, சாயா தேவி
சரத்குமார், வரலட்சுமி, சாயா தேவி

கேரளா மாநிலம் விளிஞ்சம் கடற்கரையில் கடந்த 2021ஆம் ஆண்டு போதைப்பொருள்கள் மற்றும் ஏகே 47 உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) விசாரிக்க, வரலட்சுமியின் உதவியாளர் ஆதிலிங்கம் என்பவரை 14வது நபராக கைது செய்தனர்.

போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தை அரசியல், சினிமா, கிரிப்டோ கரன்சி ஆகியவற்றில் இவர் முதலீடு செய்து வந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனால், நடிகை வரலட்சுமியிடமும் விசாரணை நடத்த இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், இதற்கும் தனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை, தன் தாயாரிடம் தான் விசாரணை நடத்தப்பட்டது என விளக்கம் கொடுத்தார் வரலட்சுமி. இருந்தாலும் இந்தப் பிரச்சினை எப்போது வேண்டுமானாலும் பூதாகரமாக வெடிக்கலாம் என்பதை கருத்தில் கொண்டே, மகளின் நலனுக்காக தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார் சரத்குமார் என்கிறது அரசியல் வட்டாரம். வரலட்சுமிக்கு இப்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

திமுக எம்எல்ஏ-வின் சேலையில் பற்றிய தீ... குஷ்பு படத்தை கொளுத்திய போது விபரீதம்!

மாஸ் வீடியோ... விஜய் வழியில் சிவகார்த்திகேயன்... அரசியலுக்கு அச்சாரம் போடும் மெகா திட்டம்?!

சச்சினின் 30 ஆண்டுகால சாதனை முறியடிப்பு... இளம் வீரர் முஷீர் கான் அபாரம்!

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் பரபரப்பு... பெல்லாரியில் சிக்கியது குற்றவாளியா?

திமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி... வார்டு புறக்கணிக்கப்படுவதாக புகார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in