’வாத்தி கம்மிங்’ பாட்டுக்கு ஷங்கர் மகள்களுடன் குத்தாட்டம் போட்ட ரன்வீர், அட்லி... தெறி வீடியோ!

’வாத்தி கம்மிங்’ பாட்டுக்கு ஷங்கர் மகள்களுடன் குத்தாட்டம் போட்ட ரன்வீர், அட்லி... தெறி வீடியோ!

'வாத்தி கம்மிங்’, ‘அப்படிப் போடு’ என விஜய் பாடல்களுக்கு ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணத்தில் அட்லி, ரன்வீர் சிங் இருவரும் அதிதி ஷங்கருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டிருக்கிறார்கள். இந்த வீடியோவை ரசிகர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் நேற்று சென்னையில் நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விக்ரம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஷங்கரின் ஆஸ்தான சிஷ்யன், இயக்குநர் அட்லியும் இந்தத் திருமணத்திற்கு வந்திருந்தார். மேலும், பாலிவுட் நடிகர் ரன்வீரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டார்.

திருமணம் முடிந்ததும் சங்கீத் நடந்திருக்கிறது. இதில்தான் ஷங்கர் மகள்கள் ஐஸ்வர்யா, அதிதியுடன் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு ரன்வீரும் அட்லியும் இறங்கி ஆட்டம் போட்டிருக்கிறார்கள். இவர்களோடு மாப்பிளை தருணும் ஆட்டம் கலக்கி இருக்கிறார். இந்தப் பாடல் மட்டுமல்லாது விஜயின் ‘அப்படிப் போடு’ பாடலுக்கும் நடனம் ஆடி மகிழ்ந்திருக்கிறார்கள்.

அதிதியின் நடனத்தைப் பார்த்தை பலரும் அவரின் எனர்ஜியை ரன்வீரோடு ஒப்பிட்டுப் பாராட்டி வருகிறார்கள். மகளின் திருமண கொண்டாட்டங்களை முடித்துவிட்டு ஷங்கர் மீண்டும் ‘இந்தியன் 2’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ படப்பணிகளில் கவனம் செலுத்த உள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன்2’ திரைப்படம் ஜூனில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

’இந்தியன்2’ படத்தோடு ‘இந்தியன்3’க்கான படப்பிடிப்பும் முடிக்கப்பட்டுவிட்டது. ‘இந்தியன் 2’ வெளியான பின்பு ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ படத்தை விரைந்து முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறார் ஷங்கர். அதன் பின்பே ‘இந்தியன்3’ படத்தில் இயக்குநர் ஷங்கர் கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது.

இதையும் வாசிக்கலாமே...  

சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!

நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி... தமிழ்நாட்டில் லோக் போல் நடத்திய பரபரப்பு கருத்துக்கணிப்பு!

பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாக பாய்ந்த பேருந்து... 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் படுகாயம்!

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in