நான் உயிரோடு இருக்கும் வரை அது நடக்காது... அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர் போனி கபூர்!

போனி கபூர்
போனி கபூர்

”நான் உயிரோடு இருக்கும் வரை ஸ்ரீதேவியின் பயோபிக் எடுக்க அனுமதிக்க மாட்டேன்” என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிர்ச்சியான ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்கிறார்.

குடும்பத்தினருடன் ஸ்ரீதேவி
குடும்பத்தினருடன் ஸ்ரீதேவி

’கந்தன் கருணை’ என்றப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு எண்பதுகளில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தனது அழகாலும் திறமையான நடிப்பாலும் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். இவருக்கும் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூருக்கும் கடந்த 1996-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த ஜோடிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் இருக்கின்றனர்.

கடந்த 2018-ம் ஆண்டு துபாய் சென்ற போது நட்சத்திர விடுதி ஒன்றில் பாத்டப்பில் தனது 54-வது வயதில் காலமானார் ஸ்ரீதேவி. ’அவர் குடித்ததால் நிலை தடுமாறி பாத்டப்பில் விழுந்து இறந்தார், அவர் இறப்பு மர்மமாகவே இருக்கிறது’ என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

கணவர் போனி கபூர் உடன் ஸ்ரீதேவி
கணவர் போனி கபூர் உடன் ஸ்ரீதேவி

ஆனால், அவர் அழகுக்காக இருந்த டயட் காரணமாகவே அவர் உடல்நிலை பாதிப்படைந்து இறந்ததாக போனி கபூர் சொன்னார். சமீபத்தில் ஸ்ரீதேவியின் சுயரிதை புத்தகம் வெளியானது. இதை ஒட்டி அவரது பயோபிக் உருவாகுமா என்ற கேள்வி போனி கபூரிடம் சமீபத்திய பேட்டியில் எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “நான் உயிரோடு இருக்கும் வரை நிச்சயம் அதற்கு அனுமதிக்க மாட்டேன். ஏனெனில், ஸ்ரீதேவி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் பிரைவேட் பர்சனாக இருந்தார். அதனால் அது அப்படியே இருக்கட்டும். நிச்சயம் அவரது பயோபிக் உருவாகாது” எனக் கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...  

 குட்நியூஸ்... இந்திய கடற்படையில் 4,108 வேலைவாய்ப்புகள்: ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

அதிர்ச்சி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை; மீட்பு பணி தீவிரம்!

சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்... மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை!

வங்கிக் கணக்கை முடக்குவதாக பாஜக மிரட்டியது... பிரேமலதா பகீர் குற்றச்சாட்டு!

தம்பி அண்ணாமலை, மோதிப் பார்ப்போமா?... சவால் விட்ட சீமான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in