சினிமாவில் இருந்து ஒதுக்கினார்கள்... பாலிவுட் அரசியலால் தான் விலகினேன்... பிரியங்கா சோப்ரா அதிர்ச்சி பேட்டி!

சினிமாவில் இருந்து ஒதுக்கினார்கள்... பாலிவுட் அரசியலால் தான் விலகினேன்...  பிரியங்கா சோப்ரா அதிர்ச்சி பேட்டி!

நடிக்க வந்த புதிதில் தான் அதிக நிராகரிப்புகளை சந்தித்ததாகவும் இப்போது பாலிவுட்டில் இருந்து விலகி இருக்க அங்கு நிலவும் அரசியல் தான் எனவும் கூறியுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா.

ஹாலிவுட் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா இவ்வாறு சொல்லி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா திருமணத்திற்குப் பிறகு அமெரிக்காவில் வசித்து வருகிறார். பாலிவுட்டில் இருந்து நடிப்பதற்கு சிறிது பிரேக் விட்டிருக்கும் பிரியங்கா சோப்ரா இப்போது ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் இருந்து பிரேக் எடுத்தது மற்றும் இங்கு ஆரம்ப காலத்தில் தான் சந்தித்த நிராகரிப்புகள் பற்றியும் தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.

அதில், "பல காரணங்களுக்காக நான் திரையுலகில் நிராகரிப்பைப் பார்த்திருக்கிறேன். அந்த பாத்திரத்திற்கு நான் சரியாக இல்லை, என்னை நடிக்க வைக்க விருப்பம் இல்லை, யாரோ ஒருவரின் காதலி நடிப்பதற்கு என பல காரணங்களைச் சொல்வேன். ‘நான் அதைவிட சிறந்தவன், நம்பிக்கையுடன் இருக்கிறேன்’ என்று நாம் அனைவரும் சமாதானம் சொல்லலாம். ஆனால், அது உண்மையல்ல!

நிராகரிப்பை உணர உங்களை நீங்கள் அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது குறித்தான தெளிவு கிடைக்கும். இதை நான் செய்தேன். அதனால்தான் இப்போது நான் இருக்கும் இடம் கிடைத்துள்ளது. நம்பிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்” என்றார்.

பிரியங்கா சோப்ரா...
பிரியங்கா சோப்ரா...

மேலும், "நான் பாலிவுட்டில் நுழைந்த ஆரம்ப காலத்தில் ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டேன். யாருடனாவது எனக்கு முரண்பாடு இருந்தது. இதனால், அங்கு என்னை யாரும் நடிக்க வைக்கவில்லை. இந்தத் துறை அரசியல் உண்மையிலேயே எனக்கு சோர்வாக இருந்தது. அதனால், ஒரு பிரேக் எடுக்க விரும்பினேன்” என்று பேசியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ஹாட்ரிக் வெற்றி... உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு மூன்று தங்கப் பதக்கங்கள்!

700 ஹெக்டேர் நாசம்; நைனிடால் நகரை நெருங்கியது காட்டுத் தீ: இந்திய ராணுவம் விரைந்தது!

ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுக்கி 8 வயது சிறுமி மரணம்... வீட்டில் தனியாக இருந்தபோது விபரீதம்

ஆமாம்... தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து இருக்கிறது... இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி!

தனியார் கம்பெனியின் ஆசிட் தொட்டியில் விழுந்து தொழிலாளி மரணம்... சென்னை அருகே சோகம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in