கேப்டன் இல்லாதது மரண வேதனை... விமானநிலையத்தில் பிரேமலதா உருக்கம்!

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

"பத்ம பூஷண் விருதினை பெறுவதற்கு கேப்டன் இல்லாதது மரண வேதனையாக இருக்கிறது” என சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 9-ம் தேதி பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்வு டெல்லி, ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. விஜயகாந்த் சார்பாக விருது பெற பிரேமலதா, அவரது சகோதரர் சுதீஷ் மற்றும் மூத்த மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் டெல்லி சென்றிருந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா...
சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா...

விருதை பெற்றுக்கொண்டு இன்று சென்னை திரும்பிய இவர்கள் மூவரையும் இளையமகன் சண்முகபாண்டியன் வரவேற்றார். சென்னை விமானநிலையத்தில் பிரேமலதாவுக்கு தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ‘கேப்டன், அண்ணியார்...’ என்று உற்சாகமாக மலர்கள் தூவி முழக்கமிட்டனர். பிரேமலதாவுக்கு மலர்கொத்து, சால்வை கொடுத்து வாழ்த்தினர்.

பின்பு அங்கு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் கேப்டன் மேல் அன்பு கொண்ட உலக தமிழருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் கேப்டனின் இந்த உயரிய விருதான பத்ம பூஷண் விருதை சமர்ப்பிக்கிறேன்.

இங்கிருந்து நேரடியாக கேப்டன் கோயிலுக்குச் சென்று அவருடைய காலடியில் இந்த விருதை சமர்ப்பிக்கப் போகிறோம். இந்த விருதை அவர் வந்து வாங்கி இருந்தால் இன்னும் பெருமையாக இருந்திருக்கும். கேப்டன் இல்லாத ஒவ்வொரு நிமிடமும் எங்களுடைய மனம் மரண வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

விஜயகாந்துக்கு பத்ம பூஷன்
விஜயகாந்துக்கு பத்ம பூஷன்

இருந்தாலும் அவருக்காக மத்திய அரசு கொடுத்த இந்த உயரிய விருதுக்கு மத்திய அரசுக்கு அவர் சார்பில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

விமான நிலையத்திலிருந்து தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் படை சூழ புறப்பட்ட பிரேமலதா, கோயம்பேட்டில் உள்ள கேப்டனின் சமாதிக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!

மதுரையில் அதிர்ச்சி... காவல் ஆய்வாளர் வீட்டு கதவை உடைத்து 250 பவுன் நகைகள் கொள்ளை!

இங்கிலாந்தில் மன்னரைத் தொடர்ந்து இளவரசியும் மருத்துவமனையில் அனுமதி... பதறும் மக்கள்!

ஆந்திராவில் பண மழை... விபத்தில் சிக்கிய வேனிலிருந்து கட்டுக் கட்டாக கொட்டிய கோடிகள்!

லாரி மீது மோதி பற்றி எரிந்த கார்... மணமகன் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in