மும்பையில் ரூ. 45 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை பூஜா ஹெக்டே!

பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் மும்பையில் 4000 சதுர அடியில் ஒரு ஆடம்பரமான வீட்டை வாங்கியுள்ளார். தெலுங்கைத் தாண்டி பாலிவுட்டிலும் அவர் படங்களில் நடித்து வருவதால் இந்த முடிவு எனத் தெரிகிறது.

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் பூஜா ஹெக்டே. ‘ராதே ஷ்யாம்’, ‘பீஸ்ட்’ என தமிழ்- தெலுங்கில் அவரது சமீபத்திய படங்கள் தொடர் தோல்வியைத் தழுவியதால் சில மாதங்கள் சினிமாவிற்கு பிரேக் விட்டவர் மீண்டும் பிஸியாகி விட்டார். தெலுங்கு, தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் பூஜா. நடிகர் ஷாகித் கபூரின் ‘தேவா’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே

பாலிவுட் படங்களில் நடிப்பதால் மும்பையில் ரூ. 45 கோடி மதிப்புள்ள கடல் பார்க்கும்படியான ஆடம்பர் வீட்டை பாந்த்ரா பகுதியில் வாங்கி இருக்கிறார் பூஜா. இந்த வீடு சுமார் 4000 சதுர அடியில் இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த வீட்டில் விரைவில் குடிபுக இருக்கிறார் பூஜா. சமீபத்தில் நடிகை ராஷி கண்ணா ஹைதராபாத்தில் புது வீடு வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட்டில் கலக்கி வரும் நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் அட்லி ஆகியோரும் மும்பையில் புது வீடு வாங்கி குடியேறி இருக்கின்றனர். இந்த வரிசையில் பூஜாவும் இணைந்துள்ளார்.

நடிகை பூஜா ஹெக்டே
நடிகை பூஜா ஹெக்டே

மறுபுறம் பூஜாவின் படங்கள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவி வருவதால் அவருடைய படங்களுக்கான சம்பளமும் குறைந்துள்ளது என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

இதையும் வாசிக்கலாமே...   

அடேங்கப்பா ரூ.4,650 கோடி பறிமுதல்... முதற்கட்ட தேர்தலுக்கு முன்பே அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்!

அதிர்ச்சி... அம்பேத்கர் ஜெயந்தி ஊர்வலத்தில் பங்கேற்ற இளைஞர் வெட்டிக்கொலை!

பிரதமர் மோடியை பார்க்கச் சென்றவர் உயிரிழப்பு... பாதுகாப்புக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி பலி!

டயர் வெடித்து தலைகீழாக கவிழ்ந்த மணல் லாரி... மணலில் புதைந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!

ஒபாமாவே அஞ்சு வருஷம் தான்... இடத்தை காலி பண்ணுங்க மோடி... முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ஆவேசம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in