சோகம்... பிரபல இசையமைப்பாளர் கே.ஜி.ஜெயன் காலமானார்

சோகம்... பிரபல இசையமைப்பாளர் கே.ஜி.ஜெயன் காலமானார்

புகழ்பெற்ற இசையமைப்பாளர் கே.ஜி.ஜெயன் கேரளாவில் காலமானார். தனது பக்தி இசைக்காக ரசிகர்களைக் கவர்ந்த அவரது இறப்பு திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விஜயன் மற்றும் கே.ஜி. ஜெயன் இருவரும் கேரளாவில் புகழ்பெற்ற இரட்டை சகோதரர்கள். இவர்கள் இருவரும் இணைந்து, 'ஜெயவிஜய' என்ற அடையாளத்தோடு இசைத்துறையில் வலம் வந்தனர். விஜயன் 1986ஆம் ஆண்டு காலமானார்.

விஜயன் மற்றும் கே.ஜி. ஜெயன்
விஜயன் மற்றும் கே.ஜி. ஜெயன்

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த கே.ஜி. விஜயன், திருப்புனித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 90. இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார். பல்வேறு முன்னணி கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றினார்.

திரைத்துறையில் பல பாடல்களில் பணிபுரிந்தாலும் இவர் பக்திப் பாடல்களுக்காக ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவர். இவர் 1991 இல் கேரள சங்கீத நாடக அகாடமி விருதையும், 2013 இல் ஹரிவராசனம் விருதையும் பெற்றார்.

நடிகர் மனோஜ் கே.ஜெயன்
நடிகர் மனோஜ் கே.ஜெயன்

'நக்‌ஷத்ர தீபங்கள்', 'மாணிக்யவீணை', 'ஸ்ரீகோவில் நடக்குறான்னு', 'மாளிகாபுரத்தம்மா', போன்றவை இவர்களின் இசையமைப்பில் வந்த புகழ்பெற்ற சில பாடல்கள் ஆகும். பிரபல மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயன் இவருடைய மகன் ஆவார்.

இதையும் வாசிக்கலாமே...

சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!

நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி... தமிழ்நாட்டில் லோக் போல் நடத்திய பரபரப்பு கருத்துக்கணிப்பு!

பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாக பாய்ந்த பேருந்து... 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் படுகாயம்!

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in