இவ்வளவு நெருக்கமான காட்சிகள் தேவையா... சீரியலுக்கு எதிராக சீறும் ரசிகர்கள்!

மாதிரி படம்
மாதிரி படம்

”குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து பார்க்கும் சீரியல்களில் எதற்கு இவ்வளவு நெருக்கமான காட்சிகள்?” என விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ‘ஆஹா கல்யாணம்’ சீரியலை ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

மாதிரி படம்
மாதிரி படம்

சேனல்களின் டிஆர்பி-க்காக சின்னத்திரையில் நடிகர்களுக்கு ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைப்பது, பில்டப்புடன் கூடிய காட்சிகளை வைப்பது, முதலிரவு காட்சிகள் என எல்லை மீறிப் போவதாக கடந்த சில வருடங்களாகவே ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் பல சீரியல்களில் கூட ரொமான்ஸ் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அட்டூழியம் தாங்க முடியவில்லை என ஆதங்கத்தைக் கொட்டி வருகின்றனர்.

இதில் அடுத்த நிலையாக, விஜய் டிவியில் ‘ஆஹா கல்யாணம்’ சீரியலின் புரோமோவைப் பார்த்து ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர். இந்த சீரியலில் அக்‌ஷயா, விக்ரம் ஸ்ரீ, மெளனிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

’ஆஹா கல்யணம்’ சீரியலில்...
’ஆஹா கல்யணம்’ சீரியலில்...

தற்போது வெளியாகியுள்ள இதன் புரோமோ வீடியோ ஒன்றில் நாயகனும் நாயகியும் பாத்ரூமிற்குள் சென்று, “ஒரே நேரத்தில் இருவரும் குளித்தால் தண்ணீர் மிச்சமாகும்” என தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்திற்கு தீர்வு சொல்லும் விதமாக ‘அடேங்கப்பா’ வசனம் பேசியுள்ளனர். அதிலும் “கதாநாயகி பட்டுப்புடவை கட்டிக்கொண்டு ஷவர் குளியல் செய்வதெல்லாம் வேறலெவல்” என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

” ‘மெட்டி ஒலி’, ‘கோலங்கள்’, ‘சித்தி’ என குடும்பத்துடன் சேர்ந்து அமர்ந்து பார்க்கும்படியான நல்ல கதைகள் கொண்ட சீரியல்கள் எல்லாம் அந்தக் காலத்தோடு மலையேறிவிட்டது. முன்பு வெட்டு, குத்து, பழிக்குப்பழி என்றிருந்த சீரியல்கள் இப்போது அடுத்த லெவலுக்குப் போய்விட்டார்கள். குழந்தைகளை எல்லாம் இந்த காலத்து டிஆர்பி சீரியல்களைப் பார்க்க வைக்க பயமாக இருக்கிறது” என ஏகத்துக்கும் புலம்பி வருகின்றனர் சின்னத்திரை ரசிகர்கள்.

இதையும் வாசிக்கலாமே...   

குட்நியூஸ்... இந்திய கடற்படையில் 4,108 வேலைவாய்ப்புகள்: ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

அதிர்ச்சி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை; மீட்பு பணி தீவிரம்!

சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்... மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை!

வங்கிக் கணக்கை முடக்குவதாக பாஜக மிரட்டியது... பிரேமலதா பகீர் குற்றச்சாட்டு!

தம்பி அண்ணாமலை, மோதிப் பார்ப்போமா?... சவால் விட்ட சீமான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in