'எந்திரன்’ சிட்டியின் மகளா இது? - ரஹ்மான் வீடியோவால் ரசிகர்கள் உற்சாகம்!

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்
இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்

இறுதியாக பேசும் ரோபோ ஒன்றை நேரில் பார்த்துவிட்டதாக இசையமைப்பாளர் ரஹ்மான் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'எந்திரன்’ ரஜினி,,,
'எந்திரன்’ ரஜினி,,,

இசைத்துறையில் ஆஸ்கர் உட்பட பல்வேறு சாதனைகளைப் படைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். இளையராஜா போன்ற ஆளுமைகளுக்கு அடுத்து சினிமாவில் இசையால் புது உற்சாகத்தைக் கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் ரஹ்மான். இசையில் பல புது தொழில்நுட்பங்களை கற்று அதை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற தீரா ஆர்வம் கொண்டவரான இவருக்குத் தீனி போடும் விதமாக அமைந்த படம்தான் ‘எந்திரன்’.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘எந்திரன்’ படத்தில் ரஜினி கதாபாத்திரம் தன்னைப் போலவே உருவாக்கும் சிட்டி கதாபாத்திரம் பலருக்கும் பிடித்த ஒன்று. மனிதர்களைப் போலவே பேசி, நடனம் ஆடி, எல்லா செயல்களையும் செய்யும் அந்த எந்திரனுக்கு இசையமைத்தது மகிழ்ச்சி என முன்பு சொல்லி இருந்தார் ரஹ்மான்.

இப்போது அதேபோன்ற பேசும் எந்திரனை நேரில் பார்த்து விட்டதாகத் தனது மகிழ்ச்சியை வீடியோ வெளியிட்டு பகிர்ந்துள்ளார் ரஹ்மான். அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் இசை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கான கோள வடிவ அரங்கம் சமீபத்தில் திறக்கப்பட்டிருக்கிறது.

அந்த அரங்கத்துக்கு சென்ற ஏ.ஆர்.ரஹ்மான், ‘மனிதர்களுடன் பேசும் ரோபோக்களை பார்த்துவிட்டேன்’ என்று வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ பின்னணியில் அவர் இசையமைத்த ‘இரும்பிலே ஒரு இருதயம்’ பாடலும் ஒலிக்கிறது. இந்த வீடியோவைப் பார்த்தப் பலரும் ‘சிட்டி மகளா இது?’ என மகிழ்ச்சியோடு கமென்ட் செய்து வருகின்றனர்.


இதையும் வாசிக்கலாமே...

6 மாதங்களுக்கான உணவுப்பொருள், டீசல் உடன் குவியும் விவசாயிகள்; தேர்தல் நெருக்கத்தில் கோரிக்கைகள் ஈடேறுமா?

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்... உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரல்களை நசுக்க முயற்சிக்கிறது: கார்கே விளாசல்!

வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கு... நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்!

பிரசவம் நடந்த 2வது நாளில் தேர்வு... 23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in