அன்னையர் தினம் 2024: இந்திய சினிமாவின் கியூட் மம்மிஸ்!

அன்னையர் தினம் 2024: இந்திய சினிமாவின் கியூட் மம்மிஸ்!

நாளை அன்னையர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் ஹீரோயின்கள் பலரும் கியூட்டான அம்மாக்கள். இவர்களில் இந்த வருடம் தங்கள் குழந்தைகளுடன் கவனம் ஈர்த்த ஹீரோயின்கள் யார் என்பது பற்றி இங்குப் பார்க்கலாம்.

நயன்தாரா:

நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியின் கியூட் குழந்தைகள் உயிர்-உலக். திருமணத்திற்குப் பிறகு வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெற்றெடுத்தார் நயன். சினிமா, பிசினஸ், தயாரிப்பு என பிஸியாக இருந்தாலும் குழந்தைகளுக்கென்று நேரம் ஒத்துக்க தவறுவதில்லை. தீபாவளி, கிறிஸ்துமஸ் என அனைத்து பண்டிகைக்கும் தவறாது குழந்தைகளுடன் புகைப்படங்களைப் பகிர்வார். உயிர்- உலக்கின் கியூட் குறும்புகளுக்கு சமூவலைதளங்களில் நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

ஸ்ரேயா:

நடிகை ஸ்ரேயா தனது மகள் ராதேவுடன் எடுத்துப் பகிரும் கலர்ஃபுல்லான ஃபோட்டோஷூட்டுக்கு லைக்ஸ் தெறிக்கும். சமத்துப் பொண்ணான ராதே பெருமைப்படும்படி இனிவரும் காலங்களில் படங்கள் நடிப்பதே தனது லட்சியம் எனக் கூறியுள்ளார் ஸ்ரேயா.

காஜல் அகர்வால்:

கிச்சுலு என்பவரைத் திருமணம் செய்த நடிகை காஜல் அகவர்வால் திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே அம்மாவானார். இவருக்கு நீல் என்ற மகன் உண்டு. அமுல் பேபி நீலின் கியூட்டான புகைப்படங்களை அவ்வப்போது சமூகவலைதளங்களில் பகிர்ந்து அன்பை வெளிப்படுத்துவார் காஜல். நீலுக்கு இப்போது ஒரு வயதாகி விட்ட நிலையில் மீண்டும் சினிமாவில் பிஸியாக தொடங்கி விட்டார் காஜல்.

அலியாபட்:

பாலிவுட்டின் ஹாட் மம்மி அலியாபட். ரன்பீருடன் திருமணம் ஆகி ஒரு மாத்திலேயே தனது கர்ப்பத்தை அறிவித்தார். இருந்தாலும் இதனை காரணம் காட்டி பிரேக் எடுக்காமல் சினிமாவில் தொடர்ந்து நடித்தார். கடந்த வருடம் நவம்பர் மாதம் ராஹா என்ற பெண் குழந்தைக்கு அம்மாவானார் அலியா. குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக ரன்பீர் சில மாதங்கள் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, நடிகை அனுஷ்கா சர்மாவும் இந்த வருடம் இரண்டாவது முறையாக அம்மாவாகி இருக்கிறார். இவர்கள் தவிர இந்த வருடம் நடிகைகள் தீபிகா படுகோனே, அமலாபால் ஆகியோரும் அம்மாவாகப் போகிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!

மதுரையில் அதிர்ச்சி... காவல் ஆய்வாளர் வீட்டு கதவை உடைத்து 250 பவுன் நகைகள் கொள்ளை!

இங்கிலாந்தில் மன்னரைத் தொடர்ந்து இளவரசியும் மருத்துவமனையில் அனுமதி... பதறும் மக்கள்!

ஆந்திராவில் பண மழை... விபத்தில் சிக்கிய வேனிலிருந்து கட்டுக் கட்டாக கொட்டிய கோடிகள்!

லாரி மீது மோதி பற்றி எரிந்த கார்... மணமகன் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்!

x
காமதேனு
kamadenu.hindutamil.in