எம்.ஜி.ஆர். நினைவுநாளில் கருணாநிதிக்கு விழா எடுக்கும் திரையுலகம்... கிளம்பும் புது சர்ச்சை!

கலைஞர் - எம்.ஜி.ஆர்.
கலைஞர் - எம்.ஜி.ஆர்.Sonal Hayat

தமிழ்த் திரையுலகில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பங்களிப்பைப் போற்றும் வகையில் அடுத்த மாதம் டிசம்பர் 24ம் தேதி சென்னையில் ’கலைஞர் 100’ நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தமிழ் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்பை போற்றும் வகையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. ’கலைஞர் 100’ எனும் மிக பிரம்மாண்டமான விழாவாக வரும் 24ம் தேதி ஞாயிறன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்த விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித், அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, மோகன்லால், இசையமைப்பாளர் இளையராஜா என இந்தியத் திரையுலகின் முக்கிய நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

’கலைஞர் 100’
’கலைஞர் 100’

இந்த நிகழ்வில் இசைக்கச்சேரி, நாடகம், நடனம் என பல விஷயங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவை ஒட்டி அடுத்த மாதம் (டிசம்பர்) 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு முழுவதும் படப்பிடிப்புகள் உட்பட திரையுலக வேலைகள் எதுவும் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஒட்டிதான் தற்போது புது சர்ச்சைக் கிளம்பியுள்ளது. ‘கலைஞர் 100’ விழா நடக்கும் டிசம்பர் 24ம் தேதி எம்.ஜி.ஆரின் நினைவு நாள். கலைஞரை விடவும் சினிமாவோடு அதிகத் தொடர்புடையவர் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்.

திரையுலகைச் சேர்த சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் கருணாநிதி
திரையுலகைச் சேர்த சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் கருணாநிதி

சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக இருந்து பின்பு அரசியல் களத்திற்கு வந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சினிமாவின் வழியே பல கருத்துகளையும் பேச முயன்றார். முதல்வரான பின்பும் மக்களுக்கான நலத்திட்டங்களையும் அவர் முன்வைத்து ஆட்சி நடத்தினார். அவர் மறைந்தாலும் எம்.ஜி.ஆர். என்ற பிம்பத்தின் மீதான கவர்ச்சி பெரும்பாலானவர்களிடம் இருக்கவே செய்கிறது. இந்தநிலையில், எம்.ஜி.ஆருக்கு இதே திரைத்துறை சங்கங்கள் ஏன் எந்த விழாவும் முன்னெடுக்கவில்லை என புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. எம்.ஜி.ஆர். நினைவுநாளில் ‘கலைஞர் 100’ விழா நடத்த பின்னால் அரசியல் அழுத்தங்களும் இருக்கிறதா எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


இன்று 17 மாவட்டங்களில் கனமழை.. ஆரஞ்சு அலர்ட்... பத்திரமா இருங்க!

உஷார்... இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்… அதிரடி அறிவிப்பு!

புட்லூர் ரயில் நிலையத்தில் பகீர்! மனைவி கண்முன்னே கணவன் கழுத்தறுத்துக் கொலை

அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து; அலறிய நோயாளிகள்!

கொட்டும் மழையில் ரசிகர்களை சூடேற்றிய தர்ஷா குப்தா

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in