தன்னைவிட 7 வயது இளைய நடிகருடன் டேட்டிங்...தேசிய விருது நடிகையால் ரசிகர்கள் ஷாக்!

நடிகை கொங்கனா சென் சர்மா
நடிகை கொங்கனா சென் சர்மா

நடிகை கொங்கனா சென் சர்மா, தன்னைவிட ஏழு வயது இளைய நடிகரை டேட் செய்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொங்கனா குழந்தைக்கு தாயானா கொங்கனா ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு முறை தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகை கொங்கனா சென் சர்மா, குழந்தை நட்சத்திரமாக நான்கு வயதிலேயே தனது சினிமா பயணத்தைத் தொடங்கினார். குழந்தை நட்சத்திரமாக அவர் நடித்தது ‘இந்திரா’ (1983) என்ற பெங்காலி திரைப்படம்.

நடிகை கொங்கனா சென் சர்மா
நடிகை கொங்கனா சென் சர்மா

கதாநாயகியாக ‘ஏக் ஜெ ஆச்சே கன்யா’, ‘டிட்லி’ உள்ளிட்ட ஏராளமானப் படங்களில் நடித்துள்ளார். 2017-ம் ஆண்டு வெளியான ’எ டெத் இன் தி கஞ்ச்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத் தயாரிப்பாளராகவும் மாறினார் கொங்கனா. அத்துடன் ’லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ சீரிஸில் 'தி மிரர்’ என்ற கதையையும் இயக்கினார். சினிமாவில் நடிகை, தயாரிப்பாளர், இயக்குநர் என அடுத்தடுத்து முன்னேறினாலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பல சோதனைகளை எதிர்கொண்டுள்ளார்.

நடிகர் ரன்வீர் ஷோரேயுடன் 2007-ல் டேட் செய்யத் தொடங்கினார் கொங்கனா. மேலும் அவர்கள் லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால், 2010-ல் கர்ப்பமானார். இதனால், இருவரும் அதே ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2011-ல் ஹாரூன் பிறந்தார். செப்டம்பர் 2015 -ல் ரன்வீரும், கொங்கனாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ ஆரம்பித்தனர். பின்னர், 2020 விவாகரத்துப் பெற்றனர்.

அமோலுடன் கொங்கனா
அமோலுடன் கொங்கனா

இப்படியான சூழ்நிலையில்தான், நடிகர் அமோல் பராஷருடன் கொங்கனா டேட்டிங் செய்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அமோல், கொங்கனாவை விட 7 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவரும் ’டோலி கிட்டி அவுர் வோ சமக்தே சிதாரே’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஹாட்ரிக் வெற்றி... உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு மூன்று தங்கப் பதக்கங்கள்!

700 ஹெக்டேர் நாசம்; நைனிடால் நகரை நெருங்கியது காட்டுத் தீ: இந்திய ராணுவம் விரைந்தது!

ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுக்கி 8 வயது சிறுமி மரணம்... வீட்டில் தனியாக இருந்தபோது விபரீதம்

ஆமாம்... தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து இருக்கிறது... இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி!

தனியார் கம்பெனியின் ஆசிட் தொட்டியில் விழுந்து தொழிலாளி மரணம்... சென்னை அருகே சோகம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in