'தில் சே’ படத்தில்...
'தில் சே’ படத்தில்...

பஸ்ஸில் தூக்கம், தரையில் அமர்ந்து டீ... ஷாருக்கானைப் புகழ்ந்த மனிஷா கொய்ராலா!

”பெரிய ஸ்டாராக இருந்த போதிலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் ஷாருக்கான் தரையில் அமர்ந்து டீ குடித்தார்” என அவருடன் நடித்த பழைய நினைவுகளைப் பகிந்துள்ளார் நடிகை மனிஷா கொய்ராலா.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானும், நடிகை மனிஷா கொய்ராலாவும் 1999-ம் ஆண்டு மணி ரத்னம் இயக்கத்தில் ’தில் சே’ படத்தில் இணைந்து நடித்தனர். வரவிருக்கும் நெட்ஃபிளிக்ஸ் தொடரான ​​’ஹீரமண்டி’க்கான செலிபிரிட்டி ப்ரீமியர் ஷோ நேற்று மும்பையில் நடந்தது. இதில் சல்மான்கான், அலியாபட், அதிதி, மனிஷா கொய்ராலா என பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஷாருக்கான்
ஷாருக்கான்

இதில் மனிஷா பேசும் போது ஷாருக்கானுடன் 'தில் சே’ படத்தில் நடித்த போது படப்பிடிப்புத் தளத்தில் நடந்த பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

”ஷாருக்கான் அப்போதும் மிகப்பெரிய ஸ்டார். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எளிமையாக தரையில் அமர்ந்து டீ அருந்துவார். அவரிடம் இருந்துதான் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்” என்றார்.

'தில் சே’ படத்தின் வசனகர்த்தாவான இயக்குநர் திக்மான்ஷு துலியா முன்பு பேட்டி ஒன்றில் ‘தில் சே’ படப்பிடிப்பின் இடைவேளையின் போது ஷாருக்கான் தரையில் தூங்கியதைப் பற்றி குறிப்பிட்டார். ”இயக்குநர் மணி ரத்னத்தின் பரபரப்பான ஷூட்டிங் ஷெட்யூல் காரணமாக, மதிய உணவு இடைவேளை குறைவாகவே இருந்தது. இதனால், ஷாருக் சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு பேருந்தின் உள்ளே தரையில் எந்த விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல், குட்டி தூக்கம் போடுவார்” என்று கூறினார்.

மணி ரத்னம், ஷாருக்கான்
மணி ரத்னம், ஷாருக்கான்

’தில் சே’ படத்திற்குப் பிறகு மணி ரத்னம்- ஷாருக்கான் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. சமீபத்தில் ஒரு விருது விழாவில் கூட, “மணி ரத்னம் சொன்னால் இந்த முறை ’தையா...தையா’ பாடலை விமானத்தின் மீது கூட ஏறி ஆடுவேன். தயவுசெய்து என்னுடன் இன்னொரு படம் செய்யுங்கள்” என்று ஷாருக்கான் மணி ரத்னத்திடம் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்!

துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்.... மஞ்சள் எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி!

சவுதி மன்னருக்கு திடீர் உடல்நலக்குறைவு... இப்போது எப்படியிருக்கிறார்?

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளம்பெண்... அதிர்ச்சி வீடியோ!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in