12 வயது தம்பிக்கு மாதவிடாய் பற்றி விளக்கும் அண்ணன்... வீடியோ வைரல்!

சகோதரனுடன் அனிஷ்...
சகோதரனுடன் அனிஷ்...

மூத்த சகோதரன் ஒருவன் தனது தம்பிக்கு மாதவிடாய் குறித்து கற்பிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர்.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கூட மாதவிடாய் குறித்து பலர் பொதுவில் அல்லது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தனிப்பட்ட முறையில் வெளிப்படையாக பேசுவதற்கு முன்வருவதில்லை. இன்னுமே கூட நாப்கின்களை கருப்பு நிற கவரில் சுற்றித்தான் வாங்கிக் கொண்டு செல்கிறார்கள் பெண்கள்.

இதுபோன்றதொரு சூழலில், மாதவிடாய் சமயத்தில் பெண்களின் அப்போதைய மனநிலை, உடல்ரீதியாக அவர்கள் எதிர்கொள்ளும் விஷயங்கள் குறித்து தனது உடன் பிறந்த தம்பிக்கு சகோதரன் ஒருவன் விளக்கிக் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி யுள்ளது. இதைப் பார்த்துவிட்டு நெட்டிசன்கள் பலரும் அந்தச் சகோதரனைப் பாராட்டி வருகின்றனர்.

சமூகவலைதளத்தில் பிரபலமாக உள்ளவர் அனிஷ் பகத். 23 வயதாகும் இவர் தன்னுடைய தம்பியின் 12-வது பிறந்தநாளன்று மாதவிடாய் பற்றி அவனிடம் பேசுகிறார். அவனுக்கு ‘பீரியட்ஸ்’ என்ற வார்த்தை அதிகம் தெரியாததால், அது பற்றி விளக்குகிறார் அனிஷ். “ஒரு சிறுமி பெண்ணாக மாறும்போது அவளது உடல் தாய் ஆவதற்கும் தயாராகிறது. இதற்காக ஒவ்வொரு மாதமும் அவளுக்கு மாதவிடாய் ரத்தம் வரும். இது மிகவும் வலிமிகுந்தது. அதனால், இந்த சமயத்தில் பெண்களுக்கு நாம் உதவ வேண்டும்” என்று சொல்கிறார் அனிஷ்.

சகோதரருடன் அனிஷ்
சகோதரருடன் அனிஷ்

இதையெல்லாம் கேட்டு ஆச்சரியப்படும் அனிஷின் தம்பி, தன்னைச் சுற்றியிருக்கும் அனைத்துப் பெண்களும் பாதுகாப்பாக இருக்கும்படி நடந்து கொள்வேன் என்கிறான். மேலும், மருந்தகத்திற்கு சென்று சானிட்டரி நாப்கின் வாங்குவது எப்படி என்றும் தம்பிக்கு அனிஷ் சொல்லிக் கொடுக்கிறார்.

இந்த வீடியோவைப் பகிர்ந்து, ’மாதவிடாய் சமயத்தில் பெண்கள் எப்படி இருப்பார்கள் என்பதைப் பற்றி நம் ஆண்களுக்கு உணர்த்துவது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். இதனால் இருவருக்குள்ளும் புரிதல் இருக்கும். ஒருவரை ஒருவர் அன்பாக நடத்துவார்கள். அதனால்தான் என் சகோதரனுக்கு இதுபற்றி சொன்னேன். இது பெற்றோர்களுக்கும் என் சகோதரன் போன்ற அனைவருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் என நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார் அனிஷ்.

இதையும் வாசிக்கலாமே...

அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் 200 பாகிஸ்தான் யாத்ரீகர்கள்... வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்!

நயன்தாரா, சமந்தாவுக்கு போட்டியாக களமிறங்கும் சினேகன் மனைவி; கலாய்க்கும் ரசிகர்கள்!

“நியாயமா ஆண்டவரே...”  கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு புகார்!

“பயந்து ஓடாதீங்க...” ரேபரேலி விவகாரத்தில் ராகுலை சீண்டிய பிரதமர் மோடி!

செல்போன் லைட்டில் அறுவை சிகிச்சை... தாயும் சேயும் உயிரிழந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in