2 நாட்களாக தேடிய உறவினர்கள்... வீட்டில் சடலமாக கிடந்த பிரபல இயக்குநர்!

மறைந்த மலையாள திரைப்பட இயக்குநர் பிரகாஷ் கோலேரி
மறைந்த மலையாள திரைப்பட இயக்குநர் பிரகாஷ் கோலேரி

கேரளாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமானதாக தேடப்பட்டு வந்த பிரபல திரைப்பட இயக்குநர், வீட்டில் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள கோலேரி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் கோலேரி (65). பிரபல சினிமா இயக்குநரான இவர் கடந்த 1987ம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 35 ஆண்டுகளாக மலையாள திரை உலகில் பணியாற்றி வந்துள்ளார். 1987ம் ஆண்டு வெளியான 'மிழிதளில் கண்ணீருமே' என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமான அவர் 1994ம் ஆண்டு ரமேஷ் அரவிந்த் நடிப்பில் வெளிவந்த 'அவன் அனந்தபத்மநாபன்', 'தீர்க்கசுமங்கலிபவ' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி உள்ளார். கடந்த 2004ம் ஆண்டு இறுதியாக 'பாட்டு புஸ்தகம்' என்ற திரைப்படத்தை அவர் இயக்கியிருந்தார்.

பிரகாஷ் கோலேரி
பிரகாஷ் கோலேரி

அதன் பின்னர் திரைத்துறையில் படங்களை இயக்காவிட்டாலும் கூட, பாடல்கள் எழுதுவது, திரைக்கதை எழுதுவது ஆகிய பணிகளில் அவர் ஈடுபட்டு வந்தார். இவருடைய பெற்றோரான குமரன், தேவகி ஆகியோர் மறைந்த பிறகு, வயநாடு அருகே உள்ள பரப்பனங்காடி சாலையில் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இதனிடையே கடந்த 2 நாட்களாக வீட்டை விட்டு பிரகாஷ் வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக அருகில் இருந்தவர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கெனிச்சிரா காவல் நிலைய போலீஸார் விசாரணை
கெனிச்சிரா காவல் நிலைய போலீஸார் விசாரணை

உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிய போதும், அவர் கிடைக்கவில்லை. இதனால் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் உள்ளே பிரகாஷ் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் கெனிச்சிரா போலீஸார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாரடைப்பு காரணமாக பிரகாஷ் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பிரகாஷ் கோலேரியின் மறைவிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

6 மாதங்களுக்கான உணவுப்பொருள், டீசல் உடன் குவியும் விவசாயிகள்; தேர்தல் நெருக்கத்தில் கோரிக்கைகள் ஈடேறுமா?

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்... உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரல்களை நசுக்க முயற்சிக்கிறது: கார்கே விளாசல்!

வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கு... நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்!

பிரசவம் நடந்த 2வது நாளில் தேர்வு... 23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in