அந்த மாதிரி காட்சியில் நடிக்க மறுத்து அழுது அடம்பிடித்த மாதுரி தீட்ஷித்... நடிகர் ரஞ்சீத் மலரும் நினைவுகள்!

மாதுரி தீட்ஷித்
மாதுரி தீட்ஷித்

’பிரேம் பிரதிக்யா’ படத்தில் தன்னை கற்பழிப்பது போன்ற காட்சியில் நடிக்க மறுத்து மாதிரி தீட்ஷித் அழுது அடம்பிடித்ததாக பாலிவுட்டின் மூத்த நடிகர் ரஞ்சீத் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகர் ரஞ்சீத்
நடிகர் ரஞ்சீத்

பாலிவுட்டில் எண்பதுகளில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை மாதுரி தீட்ஷித். இவர் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் ’பிரேம் பிரதிக்யா’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் தமிழில் சிவக்குமார், சரிதா நடிப்பில் வெளியான ‘வண்டிச்சக்கரம்’ படத்தின் ரீமேக்தான்.

இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருப்பார் நடிகர் ரஞ்சீத். படத்தில் மாதுரி தீட்ஷித்தை ரஞ்சீத் கற்பழிப்பது போன்ற ஒரு காட்சி வரும். இந்தக் காட்சியில் தான் நடிக்க மறுத்து, அழுதிருக்கிறார் மாதுரி.

இந்த சம்பவம் குறித்து நடிகர் ரஞ்சீத் இப்போது பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்தப் பேட்டியில் ரஞ்சீத், “அந்தக் காட்சியில் நடிக்க மறுத்து மாதுரி அழ ஆரம்பித்துவிட்டார். இது தெரியாமல் படப்பிடிப்பில் ஜாலியாகப் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது, படப்பிடிப்புத் தளத்தில் இருந்தவர்கள் மாதுரி அழுவது பற்றி என்னிடம் சொன்னார்கள்.

படத்தில் மாதுரியின் தந்தை கைவண்டி வைத்திருப்பார். அதில்தான் அந்தக் காட்சி படமாக்கப்பட இருந்தது. நான் சென்று அங்கு காத்திருந்தேன். பின்பு நிலைமை புரிந்ததும் மாதுரியிடம் சென்று, ‘இதுவும் நம் வேலையின் ஒரு அங்கம்தான். வில்லன் கெட்டவன் கிடையாது. ஆனால், ஹீரோயினுக்கு அவன் வில்லன் தான்’ என்று சொன்னேன். அதன்பிறகு அவரும் புரிந்து கொண்டு அந்தக் காட்சியில் நடித்தார்” என்று சொல்லி இருக்கிறார்.

1989-ல் இந்தியில் வெளியான இத்திரைப்படத்தில் மிதுன் சக்ரவர்த்தி, மாதுரி தீட்சித், ரஞ்சீத், வினோத் மெஹ்ரா மற்றும் சதீஷ் கௌஷிக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இதையும் வாசிக்கலாமே...   

குட்நியூஸ்... இந்திய கடற்படையில் 4,108 வேலைவாய்ப்புகள்: ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

அதிர்ச்சி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை; மீட்பு பணி தீவிரம்!

சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்... மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை!

வங்கிக் கணக்கை முடக்குவதாக பாஜக மிரட்டியது... பிரேமலதா பகீர் குற்றச்சாட்டு!

தம்பி அண்ணாமலை, மோதிப் பார்ப்போமா?... சவால் விட்ட சீமான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in