விஜய் ரசிகர்களை தியேட்டரில் இருந்து குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்... பரபர வீடியோ!

விஜய்
விஜய்

நடிகர் விஜய் நடித்துள்ள ‘கில்லி’ படம் தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் ரீ ரிலீஸ் ஆகி உள்ளது. அங்குதான் படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் சிலரை போலீஸ் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றி இருக்கிறார்கள்.

தரணி இயக்கத்தில் நடிகர்கள் விஜய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘கில்லி’. படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனதையொட்டி திரையரங்குகளில் கடந்த 20-ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. வெளியாகிய மூன்று நாட்களிலேயே ரூ. 12 கோடிக்கும் அதிகம் வசூல் செய்து புதுப்படங்களுக்கு இணையாக டஃப் கொடுத்தது ‘கில்லி’.

'கில்லி’ படத்தில்
'கில்லி’ படத்தில்

தியேட்டரிலும் ரசிகர்கள் ஸ்கிரீன் முன்பாக ஆடிப்பாடி கொண்டாடிய வீடியோக்களும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது. தமிழகத்தில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் விஜய்க்கு நிறைய ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் அவரது ’கில்லி’ படம் லண்டனிலும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

தமிழகத்தைப் போலவே, லண்டனிலும் உள்ள விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடி இருக்கிறார்கள். அங்கு படம் பார்க்க வந்த ரசிகர்கள் சிலர், தியேட்டருக்குள் திருட்டுத்தனமாக மதுபானங்களை எடுத்து வந்து குடித்துள்ளனர். குடித்துவிட்டு எல்லை மீறி ஆட்டமும் போட்டனர்.

இதனால், எழுந்த புகாரை அடுத்து திரையங்கிற்குள் போலீஸார் அதிரடியாக நுழைந்தனர். ஓடிக்கொண்டிருந்த படத்தை நிறுத்திவிட்டு, அங்கு கலாட்டா செய்தவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றனர். இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


வாக்குச்சீட்டில் முத்தமிட்ட பெண்கள்... லிப்ஸ்டிக் கறையால் செல்லாமல் போன 9,000 வாக்குகள்!

தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவமானம்... சும்மா விட மாட்டேன்... நடிகர் விஷால் ஆவேசம்!

தேர்தல் பணத்தில் ரூ.40 லட்சம் சுருட்டிய பாஜக நிர்வாகிகள்... சொந்தக் கட்சியினரே போஸ்டர் அடித்து கண்டனம்!

இரக்கமற்ற மகன்... சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய அவலம்! - பதற வைக்கும் வீடியோ

உச்சக்கட்ட கவர்ச்சியில் நயன்தாரா... தெறிக்கும் பாலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in