
‘லியோ’ திரைப்படத்தின் டிக்கெட்டை கோவில்பட்டியை சேர்ந்த ரசிகர் ஒருவர் ரூ.1.10 லட்சம் விலை கொடுத்து வாங்கி இருப்பது கேட்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ‘லியோ’ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்த்தபடி இன்று திரைக்கு வந்துள்ளது. இப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதில் இருந்து, ரிலீஸ் வரை ‘லியோ’ படத்தின் மீதான சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.
இந்த நிலையில் கோவில்பட்டி சென்ட்ரல் லயன்ஸ் கிளப் தலைவர் ‘லியோ’ படத்தின் டிக்கெட்டை ஒரு லட்சத்து 10 ஆயிரத்து ஒரு ரூபாய்க்கு வங்கியுள்ளார். விஜய் ரசிகர் மன்றத்திடம் இவ்வளவு விலை கொடுத்து டிக்கெட் வாங்கப்பட்டதாகவும், அந்த தொகை விஜயின் இலவச கல்வி பயிலகத்திற்கு உதவியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ‘லியோ’ படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் ரூ. 200 கோடி வரை விற்பனையாகியுள்ளது. அதில் ஓடிடி தளத்தின் உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.120 கோடிக்கும், தொலைக்காட்சி சாட்டிலைட் உரிமத்தை ரூ.80 கோடிக்கும் சன் டிவி பெற்றதாக கூறப்படுகிறது. ரிலீஸ்க்கு முன்னதாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘லியோ’ படம் லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அதிகளவில் டிக்கெட்டுகளை விற்று வசூலை வாரி குவித்து வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
உலகின் நெ.1 கார்ல்சனை வீழ்த்திய தமிழர்.. இளம் சாதனையாளருக்கு குவியும் பாராட்டு!
மீண்டும் வெடித்து சிதறிய வால்நட்சத்திரம்... பூமியை நெருங்கும் ஆபத்து!
’லியோ’ விமர்சனம் : இதெல்லாமே பெரிய சறுக்கல்... புலம்பும் ரசிகர்கள்!
வாசகர்களுக்கு ரூ.5,00,000 பரிசு... கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!
அதிர்ச்சி... ரூ.1,000 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் தேக்கம்! கதறும் நெசவாளர்கள்!