'லியோ’ படத்தின் ப்ரீமியர் ஷோ: உற்சாகத்தில் ரசிகர்கள்!

லியோ
லியோ

’லியோ’ படத்தின் ப்ரீமியர் ஷோவால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான ‘லியோ’ படத்தின் டிரெய்லரில் இடம் பெற்றுள்ள காட்சிகள் ஒரு பக்கம் வரவேற்பு பெற்றாலும் இன்னொரு பக்கம் அதன் அதீத வன்முறை, தகாத வார்த்தைகளும் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தைக் கிளப்பியது. மேலும், படத்திற்கான சிறப்பு காலை காட்சிகளுக்கு படக்குழு அரசிடம் அனுமதி கேட்டுள்ள நிலையில் அது கிடைக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

’லியோ’ தயாரிப்பாளர் லலித்துடன் விஜய்
’லியோ’ தயாரிப்பாளர் லலித்துடன் விஜய்

இந்த நிலையில் விஜய்யின் ’லியோ’ திரைப்படம் வரும் 18ம் தேதி பிரீமியர் ஷோவாக வெளியாகிறது எனவும் 1,000 திரையரங்குகளில் வரும் 18ம் தேதி மாலை மற்றும் இரவு காட்சிகள் என வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ’லியோ’ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முன்தினமே பிரீமியர் ஷோவாக வெளியிடப்படும் என்ற இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in