பழம்பெரும் நடிகர் துவாரகிஷ் காலமானார்... சோகத்தில் திரையுலகம்

நடிகர் துவாரகிஷ்
நடிகர் துவாரகிஷ்

பழம்பெரும் கன்னட நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகம் கொண்ட துவாரகிஷ் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 81.

துவாரகிஷ் நடிகராக 1964 இல் வெளியான ‘வீர சங்கல்பா’ படம் மூலம் திரையுலகில் நுழைந்தார். நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகம் கொண்டவராகத் திகழ்ந்தார். டாக்டர் ராஜ்குமார் மற்றும் இயக்குனர் சித்தலிங்கய்யாவுடன் இணைந்து, அவரது முதல் தயாரிப்பான ’மேயர் முத்தண்ணா’ படம் கிளாசிக் ஹிட் கொடுத்தது.

வயது மூப்பு காரணமாக பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்தார் துவாரகிஷ். இப்படியான சூழ்நிலையில்தான் இன்று மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமானதாக அவரது மகன் ஊடகங்களிடம் உறுதிப்படுத்தினார். இவரின் இறுதி சடங்கு பெங்களூரு ரவீந்திர கலாக்ஷேத்ராவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.

இவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. தமிழில் ரஜினிகாந்த்- ஸ்ரீதேவி நடிப்பில் உருவான ‘அடுத்த வாரிசு’ என்ற படத்தை இவர் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு கன்னட நடிகர் ஷிவ்ராஜ் குமார் நடிப்பில், வெளியான ’ஆயுஷ்மான்பவ’ என்ற படத்தை தயாரித்திருந்தார்.

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு ரசிகர்களும் தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் கன்னடத் திரையுலகைச் சேர்ந்த மற்றொரு தயாரிப்பாளரான சௌந்தர்யா ஜெகதீஷ் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!

நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி... தமிழ்நாட்டில் லோக் போல் நடத்திய பரபரப்பு கருத்துக்கணிப்பு!

பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாக பாய்ந்த பேருந்து... 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் படுகாயம்!

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in