முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பனின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பனின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் வலது கரமாக செயல்பட்ட மூத்த அரசியல்வாதி, தயாரிப்பாளர் ஆர்.எம். வீரப்பன் (98) வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்களும், ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா, பாரதிராஜா உள்ளிட்டப் பல திரைப்பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இன்று மாலை அவரது இறுதிச்சடங்குகள் நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டது. அவரது உடலுக்கு நேரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். மேலும், ஆர்.எம். வீரப்பனின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஆர்.எம். வீரப்பனின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்று பிரியா விடை பெற்றார்.
ஆர்.எம்.வி.யின் சொந்த தயாரிப்பு நிறுவனமான சத்யா மூவிஸ், எம்.ஜி.ஆருடன் இணைந்து 1964 ஆம் ஆண்டு வெளியான 'தெய்வதாய்'. இத்திரைப்படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம் இயக்குநர் கே. பாலச்சந்தர் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் பல ஹிட் படங்களை ஆர்.எம்.வி. தயாரித்தார்.
அரசியலிலும் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தார். வாழ்வாங்கு வாழ்ந்தவர் இப்போது பிரியா விடை பெற்றிருக்கிறார்!
இதையும் வாசிக்கலாமே...
சொந்தமாக கோயில் கட்டிய பிரபல நடிகர்கள்!
தாய் கண் முன் மகன் வெட்டிக் கொலை... திருவேற்காட்டில் பயங்கரம்!
தொட்ட இடமெல்லாம் கொட்டும் கோடிகள்... கோழித் தீவன நிறுவனத்தில் 3- வது நாளாக சோதனை!
உங்க அப்பாவி கணவரை ஏன் ஏமாற்றினீர்கள்... ரசிகரின் கேள்விக்கு நாசூக்காக பதில் சொன்ன சமந்தா!