'கங்குவா’ நாயகியை டாட்டூவாக்கிய காதலன்... வைரல் புகைப்படம்!

திஷா பதானி
திஷா பதானி

'கங்குவா’ நாயகி திஷா பதானியின் முகத்தை அவரது காதலன் தனது கையில் பெரிதாக டாட்டூவாக வரைந்துள்ளார். இந்தப் புகைப்படம் இப்போது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சிறுத்த சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார் பாலிவுட் நாயகி திஷா பதானி. இவர் நடிகர் ஜாக்கி ஷெராஃபின் மகன் டைகர் ஷெராஃபை காதலித்து வந்தார். ஆனால், இப்போது இருவரும் பிரேக்கப் செய்த நிலையில் வெளிநாட்டு மாடலான அலெக்ஸாண்டர் என்பவரை டேட் செய்து வருகிறார் திஷா.

தனது தோழி மெளனி ராய் மற்றும் அலெக்ஸாண்டருடன் சமீபத்தில் வெளியே சென்றிருக்கிறார் திஷா. அது தொடர்பான வீடியோ வெளியான போது அலெக்ஸ் கையில் இருந்த டாட்டூ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் இது ‘திஷாவின் டாட்டூவா?’ எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், இருவரும் காதலித்து வருகின்றனர் என்றும் நெட்டிசன்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ‘கங்குவா’ படம் மட்டுமல்லாது பான் வேர்ல்ட் படமாக பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘கல்கி 2898 ஏடி’ படத்திலும் நடித்துள்ளார் திஷா.

பிரபாஸூடன் திஷா...
பிரபாஸூடன் திஷா...

பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார் திஷா. ’அதிகம் கோலிவுட் படங்களில் நடிங்க’ என்று ரசிகர்கள் திஷாவுக்கு ரெட் கார்பெட் விரித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஹாட்ரிக் வெற்றி... உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு மூன்று தங்கப் பதக்கங்கள்!

700 ஹெக்டேர் நாசம்; நைனிடால் நகரை நெருங்கியது காட்டுத் தீ: இந்திய ராணுவம் விரைந்தது!

ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுக்கி 8 வயது சிறுமி மரணம்... வீட்டில் தனியாக இருந்தபோது விபரீதம்

ஆமாம்... தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து இருக்கிறது... இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி!

தனியார் கம்பெனியின் ஆசிட் தொட்டியில் விழுந்து தொழிலாளி மரணம்... சென்னை அருகே சோகம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in