எல்லா சக்திகளும் நாளைய உலகை காக்க வருகிறார்கள்... 'கல்கி 2898 ஏடி' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கல்கி 2898 ஏடி’
‘கல்கி 2898 ஏடி’

‘கல்கி 2898 ஏடி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், பசுபதி, தீபிகா படுகோனே என இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் ஒன்றிணைந்துள்ளனர்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கல்கி 2898 ஏடி’. அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ் உள்ளிட்டப் பலர் இதில் நடிக்கின்றனர். பிரபாஸின் கதாபாத்திரப் பெயர் இதில் பைரவா. பான் வேர்ல்ட் படமாக வெளியிடத் திட்டமிட்டிருக்கும் இந்தப் படத்தின் அறிமுக விழா கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற காமிக்கான் நிகழ்வில்தான் நடந்தது.

கல்கி போஸ்டர்
கல்கி போஸ்டர்

படத்தின் கதை மகாபாரத்தில் இருந்தே தொடங்குவதாக இயக்குநர் நாக் அஸ்வின் முன்பு சொல்லி இருந்தார். “மகாபாரதக் காலக்கட்டத்தில் தொடங்கும் இந்தக் கதை அதன் பிறகு 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களைப் பேசுகிறது. அந்த உலகம் எப்படி இருக்கும் என்பதை கற்பனையாக உருவாக்க முயன்றுள்ளோம். இதை முடிந்த வரை இந்திய பின்னணியிலேயே உருவாக்கியுள்ளோம்” என்றார்.

சமீபத்தில் அமிதாப்பச்சனின் கதாபாத்திரமான ‘அஸ்வத்தாமா’ அறிமுக போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. இந்தப் படத்தில் 15 நிமிடங்கள் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன். இதற்காக அவர் சுமார் ரூ. 20 கோடி சம்பளம் வாங்கினார் என்ற விஷயமும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

இப்படியான சூழலில்தான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ‘எல்லா சக்திகளும் நாளைய உலகை காக்க வருகிறார்கள்’ என்ற அறிவிப்புடன் இந்த வருடம் ஜூன் 27 அன்று படம் வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு.

இதையும் வாசிக்கலாமே...

ஹாட்ரிக் வெற்றி... உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு மூன்று தங்கப் பதக்கங்கள்!

700 ஹெக்டேர் நாசம்; நைனிடால் நகரை நெருங்கியது காட்டுத் தீ: இந்திய ராணுவம் விரைந்தது!

ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுக்கி 8 வயது சிறுமி மரணம்... வீட்டில் தனியாக இருந்தபோது விபரீதம்

ஆமாம்... தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து இருக்கிறது... இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி!

தனியார் கம்பெனியின் ஆசிட் தொட்டியில் விழுந்து தொழிலாளி மரணம்... சென்னை அருகே சோகம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in