’கல்கி 2898 ஏடி’ பாடல் படப்பிடிப்பு... இத்தாலி பறந்தது படக்குழு!

’கல்கி 2898 ஏடி’ படக்குழு...
’கல்கி 2898 ஏடி’ படக்குழு...

பல மொழிகளில் தயாராகிக் கொண்டிருக்கும் ’கல்கி 2898 ஏடி’ படத்தின் பாடல் ஒன்று இத்தாலியில் படமாக்கப்பட உள்ளது. இதற்காகப் படக்குழு தனி விமானத்தில் இத்தாலி பறந்துள்ளது.

'கல்கி 2898 ஏடி'
'கல்கி 2898 ஏடி'

அனைத்து மொழி ரசிகர்களும் தங்கள் படத்தைப் பார்க்க வேண்டும், அவர்களிடமும் கதைக்களத்தைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதுதான் இன்றைய தேதியில் பெரும்பாலான திரைக்கலைஞர்களின் எண்ணமாக இருக்கிறது. இதன் அடிப்படையில்தான் பான் இந்தியா கதைகள் உருவாகிறது. இதற்கடுத்த நிலையாக, பான் வேர்ல்ட் படமாக கதைக்களத்தையும் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார்கள். அப்படியான ஒரு படம்தான் ’கல்கி 2898 ஏடி’.

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே என இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருக்கும் படமாக உருவாகி வருகிறது 'கல்கி 2898 ஏடி'. இந்த வருடம் மே9 ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் பாடல் ஒன்றின் படப்பிடிப்பிற்காக இத்தாலி பறந்துள்ளது படக்குழு. தனி விமானத்தில் உற்சாகமாக கிளம்பிச் செல்லும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர்.

‘கல்கி 2898ஏடி’
‘கல்கி 2898ஏடி’

வாரணாசி, மும்பை, டெல்லி, சண்டிகர், சென்னை, மதுரை, ஹைதராபாத், விசாகப்பட்டினம், குண்டூர், பீமாவரம், காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் பல முக்கியத்துவம் வாய்ந்த மாநகரங்களில் 'கல்கி 2898 ஏடி’ உருவாக்கப்பட்டுள்ளது.

சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதையான 'கல்கி 2898 ஏடி' படத்தின் அறிமுகம் கடந்த ஆண்டு சான்- டியாகோவில் உள்ள காமிக்-கான் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் இந்தியா மட்டுமல்லாது ஆங்கிலம் உள்ளிட்ட உலகின் பல மொழிகளிலும் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஷாக்... பிறந்த நாள் கொண்டாட காதலி வீட்டிற்கு சென்ற காதலன் அடித்துக் கொலை!

மருத்துவர்களின் 12 மணி நேர போராட்டத்தால் பெயிண்டருக்கு மீண்டும் கிடைத்த வாழ்க்'கை'

நான்கு மாநில விருதுகள்... பிரபல கதாசிரியர் மாரடைப்பால் திடீர் மரணம்!

நன்றி மறந்தாரா யுவன்?! சர்சையைக் கிளப்பும் ‘தென்மாவட்டம்’!

அடுத்தடுத்து வெளியாகும் ஆபாச புகைப்படங்கள்... 'வில்லேஜ் புட் பேக்டரி' க்கு வந்த சோதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in