எனது பெயரைத் தவறாகப் பயன்படுத்தாதீர்கள்... கோர்ட் படியேறிய விஜய் பட வில்லன்!

ஜாக்கி ஷெராஃப்
ஜாக்கி ஷெராஃப்

”எனது படங்கள், குரல், பெயர் என எதையும் என் அனுமதியின்றி தவறாகப் பயன்படுத்தக் கூடாது” என நடிகர் ஜாக்கி ஷெராஃப் கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் தமிழிலும் ‘ஆரண்ய காண்டம்’, ‘பிகில்’, ‘ஜெயிலர்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தனது பெயர், படங்கள், குரல் என தன்னுடைய அனுமதியின்றி எதையும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என டெல்லி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

ஜாக்கி ஷெராஃப்
ஜாக்கி ஷெராஃப்

அதாவது தனது பெயர், புகைப்படங்கள், குரல் மற்றும் அவரது அனுமதியின்றி 'பிடு' என்ற அவரது புனைப்பெயரையும் பல்வேறு நிறுவனங்கள் முறையில்லாமல் பயன்படுத்தி வருவதாக அந்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரம் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

விசாரணையின் அடிப்படையில் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க நீதிமன்றம் பரிசீலிக்கும் எனவும் தெரிகிறது. பாலிவுட் நடிகர் ஒருவர் தங்களின் ஆளுமை உரிமைகளை பாதுகாக்க அனுமதி கோரி நீதிமன்றத்தை அணுகுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு நடிகர் அனில் கபூரும் தனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்க நீதிமன்றத்தை அணுகி இந்த வழக்கில் வெற்றி பெற்றார்.

அனில் கபூர்
அனில் கபூர்

இதனால், அவரது பெயர், குரல், உருவம், பேசும் விதம் மற்றும் சைகைகள் உள்ளிட்ட அனைத்தும் பாதுகாக்கப்படுகிறது. ஏஐ டெக்னாலஜியின் வளர்ச்சியில் யாரும் முறையற்ற வகையில் பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவும், வருங்காலத்தில் தனது குடும்பத்திற்கும் இது உதவும் எனவும் கூறினார். மேலும், இது ஒரு முன்மாதிரியான விஷயம் எனவும் அனில் கூறியிருந்தார்.

இதையும் வாசிக்கலாமே...


முடிதிருத்தும் கடையில் திடீரென நுழைந்த ராகுல் காந்தி; திக்குமுக்காடிப் போன ஊழியர்!

மும்பை பேனர் விழுந்த விபத்து.... பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு... இழப்பீடு அறிவிப்பு!

ஜெயிலுக்குப் போயும் நீ திருந்த மாட்டியா?... திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடிகை ராதிகா பாய்ச்சல்!

டெல்லியில் இருந்து சைக்கிளில் பயணம்... சேப்பாக்கத்தில் வெளியே கூடாரம்... தோனி ரசிகரின் வெறித்தனம்!

பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.80 லட்சம் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in