ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் விவாகரத்தா..? ரசிகர்கள் அதிர்ச்சி!

ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன்...
ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன்...

நடிகர்கள் ஐஸ்வர்யாராய் மற்றும் அமிதாப்பச்சன் இருவரும் விவாகரத்து பெறப் போகிறார்களா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் கிளப்பி வருகின்றனர். இதற்கான காரணத்தையும் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

குடும்பத்துடன் ஐஸ்வர்யா ராய்...
குடும்பத்துடன் ஐஸ்வர்யா ராய்...

பாலிவுட் மட்டுமல்லாது, கோலிவுட் ரசிகர்களாலும் அதிகம் விரும்பப்படும் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஐஸ்வர்யாராய். உலகஅழகி பட்டம் பெற்ற இவர் தமிழில் ‘இருவர்’, ‘ஜீன்ஸ்’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘ராவணன்’, ‘எந்திரன்’, ‘பொன்னியின் செல்வன்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் தனது நடிப்பாலும் அழகாலும் அசரடித்திருந்தார் ஐஸ்வர்யா.

பாலிவுட்டில் சல்மான் கான், அமீர் கான் என பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்ட ஐஸ்வர்யா ராய்க்கும் பாலிவுட் பாட்ஷா அமிதாப்பின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

அபிஷேக் மற்றும் மகளுடன் ஐஸ்வர்யாராய்...
அபிஷேக் மற்றும் மகளுடன் ஐஸ்வர்யாராய்...

இந்த ஜோடிக்கு 12 வயதான ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். இந்த நிலையில்தான் ஐஸ்வர்யா-அபிஷேக் பச்சன் பிரியப் போகிறார்கள் என்ற செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதாவது ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்ததிலிருந்து அவர்களது திருமண மோதிரம் இல்லாமல் அபிஷேக் பச்சன் பொது வெளிக்கு வந்ததில்லை. ஆனால், சமீபத்தில் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அந்த மோதிரம் இல்லாமல் வந்தார். இதனைப் பார்த்த பலரும் அபிஷேக் கையில் மோதிரம் இல்லை எனவே அவருக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் சண்டையா... பிரியப் போகிறார்களா? என்று சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர்.

திருமணம் ஆன புதிதில் தங்களுக்கு இடையில் நிறைய சண்டைகளும் கருத்து வேறுபாடுகளும் வந்ததாக இருவரும் பேட்டிகளில் தெரிவித்திருந்தனர். ஆனால், அவை எல்லாம் கணவன் - மனைவிக்குள்ளே வரும் சாதாரண சண்டைகள்தான் என அப்போதே அதைத் தெளிவுப்படுத்தினார்கள். இந்த நிலையில், இந்த விஷயத்தை தொடர்புபடுத்தி ரசிகர்கள் அவர்களது விவாகரத்து செய்தியையும் பரப்பி வருகின்றனர். ஆனால், இதுகுறித்து ஐஸ்வர்யாவோ அபிஷேக்கோ எதுவும் தெளிவுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதையும் வாசிக்கலாமே...

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்... மீண்டும் புழல் சிறையில் அடைப்பு!

ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு! டிசம்பர் 20 கடைசி நாள்!

துணை நடிகை தற்கொலை; புஷ்பா பட நடிகர் ஜெகதீஷ் கைது!

தொழில்நுட்ப கோளாறால் விமான நிலையத்தில் 15 மணி நேரம் தவித்த பயணிகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in