பரபரப்பு...லோகேஷ் கனகராஜ் படத்தில் இருந்து அதிரடியாக நயன்தாரா நீக்கம்?

நயன்தாரா
நயன்தாரா

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தில் இருந்து நயன்தாரா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ’லியோ’ திரைப்படம் வரும் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கடுத்து ரஜினிகாந்தின் 171-வது படத்தை இயக்க இருக்கிறார் லோகேஷ். இயக்கம் மட்டுமல்லாது, தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வரக்கூடிய அவர் ரத்னகுமார் இயக்கும் படத்தைத் தயாரிக்க இருப்பதாகத் தகவல் வெளியானது.

இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் முதல் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நயன்தாரா
நயன்தாரா

முதலில் இந்த படம் த்ரில்லர் ஜானரில் படமாக்கத் திட்டமிடப்பட்டது. இந்தக் கதையில்தான் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், நயன்தாரா நடிக்க இருந்தனர். ஆனால், தற்போது இந்த படத்தின் கதை மாற்றப்பட்டுள்ளதாகவும், எனவே ராகவா லாரன்ஸ் ஜோடியாக வேறு நடிகையை நடிக்க வைக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாகவும் பரபரப்பு தற்போது தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இதையும் வாசிக்கலாமே...

கட்டுக்கட்டாக பணம்... அள்ள அள்ள ஆவணங்கள்... திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக ரெய்டு!

சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!

பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!

அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in