’ஹீரமண்டி: தி டயமண்ட் பஜார்’... தேசிய விருது இயக்குநரின் அடுத்த படைப்புக்கு எகிறும் எதிர்பார்ப்பு!

’ஹீரமண்டி: தி டயமண்ட் பஜார்’... தேசிய விருது இயக்குநரின் அடுத்த படைப்புக்கு எகிறும் எதிர்பார்ப்பு!

சஞ்சய் லீலா பன்சாலியின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சீரிஸான ’ஹீரமண்டி: தி டயமண்ட் பஜார்’ ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் மே 1 அன்று வெளியாக உள்ளது. பாலிவுட் பிரபலங்களுக்கு இந்த சீரிஸ் ப்ரீமியர் செய்யப்பட்ட நிலையில், இந்த தொடரை எதிர்பார்த்து ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

’ராம் லீலா’, ‘பத்மாவத்’, தேசிய விருது பெற்ற ‘கங்குபாய்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. இவரது இயக்கத்தில் உருவாகி மிகவும் எதிர்பார்க்கப்படும் தொடர் ’ஹீரமண்டி: தி டயமண்ட் பஜார்’. பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட இந்தியாவில் சுதந்திரம் பெற, ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய லாஹோரில் இருக்கும் ஹீரமண்டியின் தவைஃப்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்களை மையப்படுத்தி இந்த சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது.

ஆடல், பாடல் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களே தவைஃப்கள். 1940-களில் இந்தக் கதை நடைபெறுகிறது. இதில் மனிஷா கொய்ராலா, சோனாக்ஷி சின்ஹா, ரிச்சா சதா, ஷர்மின் சேகல், அதிதி ராவ் மற்றும் சஞ்சீதா ஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், இந்தத் தொடரில் ஃபர்தீன் கான், அத்யாயன் சுமன் மற்றும் சேகர் சுமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நேற்று நெட்ஃபிளிக்ஸ் இந்திய பிரபலங்களுக்காக பிரத்யேகமாக இந்த சீரிஸை ப்ரீமியர் செய்தது. இதில் சல்மான் கான், அலியா பட், விக்கி கவுஷல், ரேகா மற்றும் ஜெனிலியா தேஷ்முக் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். ’ஹீரமண்டி’ பற்றிய விமர்சனத்தை முதலில் பகிர்ந்தவர்களில் நடிகை ஜெனிலியாவும் ஒருவர்.

“ஹீரமண்டி’யின் 2 எபிசோட்களை இப்போதுதான் பார்த்தேன். என்ன ஒரு உலகம்... என்ன ஒரு பயணம்! சஞ்சய் சார் எப்போதும் போல அசத்தியுள்ளார். இது ஒரு சூப்பரான முயற்சி. நெட்ஃபிளிக்ஸ், இது உண்மையிலேயே சிறப்பு!” என்று அவர் கூறியுள்ளார்.

பிரபலங்களின் இந்த உற்சாகம் தற்போது ரசிகர்களுக்கும் தொற்றிக் கொண்டுள்ளது. அதனால் அவர்கள் சீரிஸ் வெளியாகும் தினத்தை நோக்கி ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்!

துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்.... மஞ்சள் எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி!

சவுதி மன்னருக்கு திடீர் உடல்நலக்குறைவு... இப்போது எப்படியிருக்கிறார்?

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளம்பெண்... அதிர்ச்சி வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in