சோகம்... கோல்டன் குளோப் வென்ற நடிகை பார்பரா ரஷ் காலமானார்!

நடிகை பார்பரா ரஷ்
நடிகை பார்பரா ரஷ்

கோல்டன் குளோப் விருது வென்ற ஹாலிவுட்டின் மூத்த நடிகை பார்பரா ரஷ் காலமானார். இதனை அவரது மகள் உறுதிப்படுத்தி யுள்ளார். இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகை பார்பரா ரஷ் (97). இவர் மார்ச் 31 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் இறந்தார் என்பதை அவரது மகள் கிளாடியா கோவன் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். 'இட் கேம் ஃப்ரம் அவுட்டர் ஸ்பேஸ்', 'பேட்டன் பிளேஸ்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்பரா ரஷ். அவர் இறந்த செய்தியை அவரது மகளும் ஃபாக்ஸ் நியூஸ் சேனல் நிருபருமான கிளாடியா கோவன் பகிர்ந்துள்ளார்.

’எனது அம்மா வாழ்வில் எந்தக் குறையும் இல்லாமல் நிறைவாக வாழ்ந்து எங்களை விட்டுப் பிரிந்திருக்கிறார். அதுவும் அவருக்கு மிகவும் பிடித்த ஈஸ்டர் விடுமுறை நாளில் அவரது மறைவு நடந்துள்ளது. இனி வரும் நாட்களில் எங்களுக்கு ஈஸ்டர் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்’ எனக் கூறியுள்ளார் கிளாடியா.

1954-ல் 'இட் கேம் ஃப்ரம் அவுட்டர் ஸ்பேஸ்' படத்தில் நடித்ததற்காக மிகவும் நம்பிக்கைக்குரிய புதுமுகத்திற்கான கோல்டன் குளோப் விருதை வென்றார் பார்பரா ரஷ். பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் ரஷ். பால் நியூமன், ராக் ஹட்சன், டீன் மார்ட்டின், மார்லன் பிராண்டோ, ஃபிராங்க் சினாட்ரா மற்றும் ரிச்சர்ட் பர்டன் போன்ற நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார்.

1956-ல் வெளியான 'பிக்கர் தேன் லைஃப்' படத்தில் ரஷின் நடிப்பு பாராட்டப்பட்டது. கூடுதலாக, அதே ஆண்டில், இரண்டாம் உலகப் போரை மையமாகக் கொண்டு வெளியான 'தி யங் லயன்ஸ்' படத்தில் மார்லன் பிராண்டோ மற்றும் மாண்ட்கோமெரி கிளிஃப்ட் ஆகியோருடன் இணைந்து, அமெரிக்க சிப்பாய் மைக்கேல் வைட்டேக்கரின் காதலியாக நடித்தார் ரஷ். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...    

‘என்னது... நாடு தீப்பற்றி எரியுமா? இதுதான் ஜனநாயகத்தின் மொழியா?’ ராகுலுக்கு எதிராக குமுறும் மோடி

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஸ்டாலின்... மு.க.அழகிரியின் மகன் உடல்நிலை பற்றி விசாரித்தார்!

முதல்வர் மாற்றம்... கேஜ்ரிவால் இல்லத்தில் குவியும் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள்!

‘காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க காரணம் நேரு’ அமித் ஷா அடுத்த அட்டாக்

காதல் வலையில் சிக்கிய ஷாருக்கான் மகன்... பிரேசிலியன் நடிகையுடன் காதலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in