இந்தியாவைப் பாருங்கள்... வாய்பிளக்கும் ஹாலிவுட்! மூன்று ‘சந்திரயான் -3’ செலவில் உருவாகும் கிளாடியேட்டர்-2 திரைப்படம்

கிளாடியேட்டர் திரைப்படத்தில் ரஸ்ஸல் க்ரோ
கிளாடியேட்டர் திரைப்படத்தில் ரஸ்ஸல் க்ரோ

’கிளாடியேட்டர் 2’ ஹாலிவுட் திரைப்படத்தின் எகிறும் பட்ஜெட் செலவினம், இந்தியாவின் சந்திரயான் 3 விண்வெளி திட்ட மதிப்புக்கு மும்மடங்காக அதிகரித்துள்ளது.

2000-ல் வெளியாகி உலகம் முழுக்க கவனம் ஈர்த்த பிரம்மாண்ட திரைப்படம் ’கிளாடியேட்டர்’. ரஸ்ஸல் க்ரோ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் பெருவெற்றி கண்டது. பண்டைய ரோம ராஜ்ஜியத்தின் பின்னணியில் உருவான இந்த திரைப்படத்தை ரிட்லி ஸ்காட் இயக்கியிருந்தார். பிற்பாடு வெளியான வரலாற்று பின்புல திரைப்படங்கள் அனைத்துக்குமே கிளாடியேட்டர் ஒரு முன்மாதிரியாகும் அளவுக்கு மிரட்டியிருந்தது.

சந்திரயான் 3
சந்திரயான் 3

கிளாடியேட்டர் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்துக்கான விதை 2001-ல் போடப்பட்டது. தயாரிப்பு நிறுவனம் கைமாறியதில் கிளேடியேட்டர்-2 யோசனை 2006 - 2018 இடையே முடங்கியது. பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக வேகம் கண்ட படப்பிடிப்பால், நவம்பர் மாதம் திரைக்கு வர கிளேடியேட்டர்-2 திட்டமிட்டிருக்கிறது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நேர்ந்த விபத்துகள், குறிப்பாக குதிரைகள் பெருமளவு இறந்தது தொடர்பான பீட்டா அமைப்பின் தலையீடு, ஹாலிவுட் ஸ்டிரைக் ஆகியவை காரணமாக படப்பிடிப்பு அடிக்கடி தடைபட்டது.

குறிப்பாக திரைப்படத்தின் பட்ஜெட் சவாலாக உயர்ந்தது. 165 மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டில் தொடங்கிய திரைப்படம் தற்போது 310 மில்லியன் டாலருக்கு எகிறி இருக்கிறது. அண்மையில் கவனம் ஈர்த்த ’பார்பி’ மற்றும் ’ஓப்பன்ஹெய்மர்’ ஆகிய 2 திரைப்படங்களின் மொத்த பட்ஜெட் தொகையே 245 மில்லியன் அமெரிக்க டாலர் எனும்போது, கிளாடியேட்டர் 2 செலவு ஹாலிவுட்டை கிறுகிறுக்கச் செய்திருக்கிறது.

கிளாடியேட்டர் 2 திரைப்படத்தில்...
கிளாடியேட்டர் 2 திரைப்படத்தில்...

கிளாடியேட்டர் 2 பட்ஜெட்டை குறைசொல்வோர், இந்தியாவின் இஸ்ரோ விண்வெளித் திட்டத்துடன் ஒப்பிட்டு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில் இந்தியாவின் வெற்றிகரமான சந்திரயான் 3 திட்டத்தை விட மும்முடங்கு செலவினத்தில் கிளாடியேட்டர் 2 சிக்கியிருக்கிறது. முன்னதாக ’இன்டர்ஸ்டெலர்’ உள்ளிட்ட ஹாலிவுட்டின் விண்வெளி சார்ந்த திரைப்படங்களின் தயாரிப்பு செலவைவிட குறைந்த பட்ஜெட்டில் இந்தியா தனது செவ்வாய் கிரக ஆய்வுக்கான ’மங்கள்யான்’ திட்டத்தை வெற்றிகரமாக்கியது பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


அடுத்தடுத்து பெயர்ச்சியாகும் கிரகங்கள்... ஒரே நாளில் நவக்கிரக சுற்றுலாவுக்கு சிறப்பு பேருந்து அறிமுகம்!

அண்ணன் பேச்சை அண்ணனே கேட்கமாட்டாரு... சீமானை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

கூகுள் பே சேவை ஜூன் 4 முதல் நிறுத்தம்...பயனாளர்கள் அதிர்ச்சி!

ராணிப்பேட்டையில் 541 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு... அதிர்ச்சியில் மக்கள்!

தமிழ்நாட்டில் ஆபரேஷன் லோட்டஸ்... கே.பி.ராமலிங்கம் சொல்லும் கணக்கு நடக்குமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in