மீண்டும் திரைக்கு வரும் எம்.ஜி.ஆர்.... ரசிகர்கள் கொண்டாட்டம்!

மீண்டும் திரைக்கு வரும் எம்.ஜி.ஆர்.... ரசிகர்கள் கொண்டாட்டம்!

எம்.ஜி.ஆரை தற்போதுள்ள ஏ.ஐ. டெக்னாலஜி மூலம் ரசிகர்கள் மீண்டும் திரைக்குக் கொண்டு வந்துள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்துள்ள ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது, கிரியேட்டிவிட்டியை குறைக்கிறது என்ற ரீதியில் ஏஐ தொழில்நுட்பம் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் இன்னொரு பக்கம் ஆச்சரியமான விஷயங்களையும் அது செய்து வருகிறது. அந்த வகையில், ‘ஜெயிலர்’ பட காவாலாவுக்கு சிம்ரனை ஆட வைத்தது, இளம் வயதில் ரஜினி, ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியின் பாடல் ஒன்றில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி. குரலைப் பயன்படுத்தியது என பல விஷயங்கள் ரசிக்கத்தக்க வகையில் டிரெண்டானது.

அந்த வகையில், தற்போது மக்களுக்குப் பிடித்த நாயகனாக திரையிலும் அரசியலிலும் வலம் வந்த எம்.ஜி.ஆரை ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் மீண்டும் கொண்டு வந்திருக்கிறார்கள் ரசிகர்கள். ’கண்போன போக்கிலே கால்போகலாமா’ எனப் பாடிக் கொண்டு எம்.ஜி.ஆர். திரையில் வர ரசிகர்கள் இதைப் பார்த்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இப்படி ஏ.ஐ. டெக்னாலஜி மூலமாக எம்.ஜி.ஆர். திரும்ப வந்து படங்கள் நடித்தால் இப்போதுள்ள முன்னணி ஹீரோக்கள் வசூலில் அவரிடம் தாக்குப் பிடிக்க மாட்டார்கள் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை... தொண்டர்கள் அதிர்ச்சி!

அடப் பாவமே... ஜி.பி.முத்துவுக்கா இப்படி நடந்துச்சு?

அவமானப்படுத்திட்டு யாருக்கு வருத்தம் தெரிவிக்கிறார்... ஞானவேலை ராஜாவை வெளுத்து வாங்கிய சசிகுமார்!

திருமண ஊர்வலத்தில் தகராறு... அண்ணன் - தம்பி குத்திக்கொலை!

கணவன்-மனைவி சண்டை... அவசரமாக டெல்லியில் தரையிறங்கிய விமானம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in