கணவன்-மனைவி கடும் சண்டை... அவசரமாக டெல்லியில் தரையிறங்கியது பாங்காங் விமானம்!

தகராறு
தகராறு
Updated on
1 min read

பாங்காக் சென்று கொண்டிருந்த விமானம் கணவன், மனைவி சண்டையால் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கபட்டது.

ஜெர்மனியின் முன்ச் நகரில் இருந்து தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு லுஃப்தான்சா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் பயணித்த கணவன், மனைவி நடுவானில் திடீரென்று சண்டையிட்டுக் கொண்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. இதைத் தொடர்ந்து விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானம்
விமானம்

இதுகுறித்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'கணவன், மனைவியின் சண்டைக்கான காரணம் தெரியவில்லை. ஆனால், அவர்கள் சண்டையிட்டதால் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.' என்று தெரிவித்தார்.

மேலும், முதலில் பாகிஸ்தானில் தரையிறக்க அனுமதி கோரப்பட்டதாகவும், அனுமதி நிராகரிக்கப்பட்டதால் டெல்லியில் தரையிறக்கப்பட்டு விமானத்தில் இருந்த ஆண் பயணி பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் பாங்காக் நோக்கி சிறிது தாமதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in