+2வுக்கு பின் பொறியியல் படிப்புகளில் எது பெஸ்ட்? என்னென்ன வாய்ப்புகள்?

+2வுக்கு பின் பொறியியல் படிப்புகளில் எது பெஸ்ட்? என்னென்ன வாய்ப்புகள்?

பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு அடுத்து கல்லூரிக் கனவாக முதல் இரண்டு சாய்ஸாக மருத்துவம், பொறியியல் படிப்புகள் இருக்கின்றன. ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பலரும் பொறியியல் படிப்பின் பின்னே ஓட, புற்றீசல் போல தனியார் பொறியியல் கல்லூரிகளும் பெருகின.

இப்போது, பொறியியல் படிப்புகளுக்கான மோகம் குறைந்திருக்கிறதா அல்லது மவுசு கூடியிருக்கிறதா? வாய்ப்புகள் என்னென்ன? என்பது குறித்து கல்வியாளர் செல்வகுமார் காமதேனு டிஜிட்டலுக்காக நம்மோடு பேசியிருக்கிறார்.

அதில், “பொறியியல் படிப்புக்கு என்றுமே மவுசு இருக்கிறது. ஆனால், அதில் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கிறோம், நாம் படிக்கப் போகும் கல்லூரி என்ன என்பதுதான் மிக முக்கியமான விஷயம். பொறியியல் படிப்பு என்றால் ஐஐடி, என்ஐடி என்பதைத் தாண்டி தமிழக அரசின் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 440க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் கவுன்சிலிங் நடைபெறும்.

இதில் மாணவர்களின் +2 மதிப்பெண்கள் அடிப்படையில்தான் கல்லூரிகளில் சீட் கிடைக்கும். பொறியியலில் என்ன கோர்ஸ் முதன்மையானது என்பதைப் பார்க்கலாம். கம்யூட்டர் சயின்ஸ் எடுத்துக் கொள்வோம். இதைச் சார்ந்து இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிசினஸ் சிஸ்டம், டேட்டா சயின்ஸ், ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ், மிஷின் லேர்னிங் என கம்யூட்டர் சயின்ஸ் சார்ந்து நிறைய கோர்ஸ் இருக்கிறது.

இவைத் தவிர்த்து, கோர் இன்ஜினியரிங் படிப்புகளாக சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், புரொடக்‌ஷன் இன்ஜினியரிங், பெட்ரோலியம் இன்ஜினியரிங் என நிறைய படிப்புகள் இருக்கிறது. இதில் எந்த கோர்ஸ் மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், நல்ல கட் ஆஃப் வைத்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்குப் பிடித்த கோர்ஸ் நல்ல கல்லூரியில் கிடைத்தால் தாராளமாக அங்கே படியுங்கள்.

மாதிரிப் படம்...
மாதிரிப் படம்...

இதைத்தாண்டி, கட் ஆஃப் குறையும்போது தான் சிக்கல். உங்களுக்குப் பிடித்த கோர்ஸ் கிடைக்கிறது என்பதற்காக எந்தக் கல்லூரியிலும் சேரலாம் என்ற முடிவை மாணவர்கள் நிச்சயம் பரிசீலிக்க வேண்டும். நல்ல கட் ஆஃபில் இருப்பவர்கள் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதுதான் சிறந்தது. ஏனெனில், சிறந்த கல்லூரிகளில் நல்ல விரிவுரையாளர்கள் இருப்பார்கள். வேலை வாய்ப்பிற்காக முன்னணி நிறுவனங்களோடு டை-அப்பில் இருப்பார்கள். நிறைய சக்சஸ் ஸ்டோரீஸை அந்தக் கல்லூரி கொடுத்திருக்கும். அதனால் நல்ல கட்டமைப்புதான் மாணவர்களுக்கு முக்கியம்.

அண்ணா யுனிவர்சிட்டி கல்லூரிகளின் தரமதிப்பீட்டை அதன் இணையதளத்தில் வெளியிடும். அதை வைத்து நாம் முடிவு செய்து கொள்ளலாம்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

  

சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!

நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி... தமிழ்நாட்டில் லோக் போல் நடத்திய பரபரப்பு கருத்துக்கணிப்பு!

பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாக பாய்ந்த பேருந்து... 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் படுகாயம்!

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in