'லியோ' படத்தை திரையிட வேண்டாம்... இலங்கை தமிழ் எம்.பிக்கள் கடிதத்தால் விஜய் அதிர்ச்சி!

லியோ படத்தில் விஜய்
லியோ படத்தில் விஜய்

இலங்கையில் அக்.20-ம் தேதி ’லியோ’ திரைப்படத்தை திரையிட வேண்டாம் என்று நடிகர் விஜய்க்கு அந்நாட்டு தமிழ் எம்.பிக்கள் செல்வம், அடைக்கலநாதன், சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் எம்.பிக்கள் கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 சி.வி.விக்னேஸ்வரன்
சி.வி.விக்னேஸ்வரன்

அந்த கடிதத்தில், ’’தங்களது ’லியோ’ திரைப்படம் இம்மாதம் 19-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இலங்கையில் வெளியிடவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தங்களது நடிப்பில் உருவாகும் திரைப்படங்களை எங்கள்  தமிழர்கள் பார்த்து மகிழ்கிறார்கள். அதேவேளை இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் உங்களின் ரசிகர்களாகவும் இருக்கிறார்கள்.

அண்மையில் முல்லை தீவு மாவட்ட நீதிபதி சரவணன் ராஜா அவர்கள் மீதான இலங்கை அரசின் அழுத்தத்தினாலும், உயிர் அச்சுறுத்தலினாலும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் நீதி கோரி பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த மாதம் இருபதாம் தேதி வடக்கு கிழக்கில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த நாளில் தங்களது திரைப்படம் வெளிவருவது எங்களது போராட்டத்திற்கு பின்னடைவாகவே இருக்கின்றது. அத்துடன் அது ஈழத் தமிழர்களை அவமதிக்கும் செயல்பாடாகவே இருக்கும்.

ஈழத் தமிழர்களுக்கும், உங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் இருப்பதனாலும்,  பல லட்சக்கணக்கானோர் உங்களுக்கு ரசிகர்களாகஇருப்பதனாலும், லியோ திரைப்படக் காட்சிகளை இந்த மாதம் 20-ம் தேதி இலங்கையில் நிறுத்தி வைக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறோம்’’ என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கடிதத்தால் நடிகர் விஜய் மற்றும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

HBD JYOTHIKA | மறக்க முடியாத நாளும்... மறுத்து... பின் கிடைத்த வாய்ப்பும்!

இந்தியாவைத் தோற்கடிச்சா என் கூட டின்னர் சாப்பிடலாம்... சர்ச்சையைக் கிளப்பிய பிரபல நடிகை!

அதிர்ச்சி... இளம் மல்யுத்த வீராங்கனை தற்கொலை!

வரி ஏய்ப்பு புகார்... தமிழகத்தில் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு!

சோகம்... எல்லாமே 2000 ரூபாய் நோட்டுக்கள்... 1.50 லட்சத்தை  மாற்ற முடியாமல் தவிக்கும் பெண்மணி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in