சங்கீத கலாநிதி விருது சர்ச்சை... பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு கனிமொழி ஆதரவு!

பாடகர் டி.எம்.கிருஷ்ணா
பாடகர் டி.எம்.கிருஷ்ணா

சங்கீத கலாநிதி விருது விவகாரத்தில் கர்நாடகா இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு திமுக எம்.பி கனிமொழி ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு சங்கீத கலாநிதி விருது அளிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், சங்கீத கலாநிதி விருதினை டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக்கூடாது என்று ஒரு தரப்பினர் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர். சங்கீதம் பாடும் மேடைகளில் பல்வேறு முற்போக்கு பணிகளையும் கிருஷ்ணா செய்துவருவதால், அவருக்கு எதிரானவர்களே தற்போது இந்த விருது அறிவிப்பையும் எதிர்ப்பதாக கூறப்படுகிறது.

பாடகிகள் ரஞ்சினி, காயத்ரி
பாடகிகள் ரஞ்சினி, காயத்ரி

பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது அறிவிப்புக்கு கர்நாடக இசைக்கலைஞர்கள் ரஞ்சினி, காயத்ரி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வரும் டிசம்பர் மாதம் சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற உள்ள 98-வது மார்கழி நிகழ்வை புறக்கணிக்க போவதாகவும் கூறியுள்ளனர். பெரியாரை போற்றும் டி.எம்.கிருஷ்ணா போன்றோரை விருது கொடுத்து ஊக்குவிப்பது ஆபத்தானது என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இவர்களின் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு திமுக எம்.பி கனிமொழி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில், 'இந்த விருது அறிவிப்பு, இசை சகோதரத்துவத்தின் சில பகுதிகளை உலுக்கி உள்ளது. டி.எம் கிருஷ்ணாவின் சமூக நம்பிக்கைகள் அல்லது பெரியாருடனான அவரது ஈடுபாடு ஆகியவற்றால் அவர் வெறுப்பையும், பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருகிறார். பெரியாரின் கருத்துகளை படித்தால், அவர் உலகம் கண்ட மிகப் பெரிய பெண்ணியவாதிகளில் ஒருவர் என்பது நமக்கு புரியும். அவர் ஒருபோதும் இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்ததில்லை. இந்த வெறுப்பு, சமீபத்தில் கர்நாடகாவில் பாஜக அமைச்சின் வெறுப்பு நிறைந்த பேச்சைப் போன்றது' என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING : ராம்தேவ்க்கு சம்மன்... நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்!

ஐபிஎல் போட்டி டிக்கெட்டுகள் கள்ளசந்தையில் விற்பனை: திமுக உடந்தை?! அதிருப்தியில் ரசிகர்கள்!

பாமகவுக்கு குடும்பமும், பணமுமே பிரதானம்... பொளந்து கட்டிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்!

பாஜக பிரமுகர் கழுத்தை நெரித்துக் கொலை: தகாத உறவைக் கண்டித்ததால் மனைவி வெறிச்செயல்!

பாஜக கொடியுடன் வந்த சொகுசு கார்... தேர்தல் அதிகாரிகளின் சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in