ரஜினியின் ‘கூலி’ படத்தை காலி செய்த வெங்கட்பிரபு... சர்ச்சைக்கு புது விளக்கம்!

ரஜினியின் ‘கூலி’ படத்தை காலி செய்த வெங்கட்பிரபு... சர்ச்சைக்கு புது விளக்கம்!

ரஜினிகாந்த் போன்ற மாஸ் ஹீரோக்களுக்கு எல்லாம் ஒரே மாதிரியான டிரெய்லர்தான் என ’யாரடி நீ மோகினி’ படப்புகழ் நடிகர் கார்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதனை ஆதரிக்கும் விதமாக இயக்குநர் வெங்கட்பிரபுவும் இதனைப் பகிந்திருந்தார். இதுதான் சர்ச்சைகளுக்கு காரணமாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படம் ‘கூலி’. கடந்த ஏப்ரல் 22 அன்று படத்தில் டைட்டில் டீசர் வெளியானது. இதில் நடிகர் ரஜினிகாந்த் ரெட்ரோ லுக்கில் மாஸாக வசனம் பேசி நடித்திருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் ஹிட்டானது. இந்த டிரெய்லரை ‘யாரடி நீ மோகினி’ படத்தில் தனுஷின் நண்பராக நடித்திருந்த நடிகர் கார்த்தி கேலி செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இவர் இப்போது ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளையும் செய்து வருகிறார்.

’கூலி’ ரஜினி காந்த்
’கூலி’ ரஜினி காந்த்

’கூலி’ டிரெய்லர் பார்த்தப் பின்பு அவர், ‘மாஸ் நடிகர்களின் எல்லா டிரைய்லர்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான் உள்ளது. ’அவன் வரப்போறான், வந்துட்டான், செய்யப் போறான்’ என்று ஒரே டெம்ப்ளேட்டில் தான் உள்ளது. மக்கள் வித்தியாசமாக எதிர்பார்க்கிறார்கள்’ என்று கூறி கேலி செய்திருந்தார்.

இந்த வீடியோவைதான் இயக்குநர் வெங்கட்பிரபு சிரிக்கும் எமோஜியோடு தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் பலரும் வெங்கட்பிரபு ‘கூலி’யை காலி செய்கிறாரா என சர்ச்சையைக் கிளப்பினர்.

இதற்குதான் பதறிப்போய் வெங்கட்பிரபு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில், ’நான் ‘கூலி’ படத்தை கேலி செய்யவில்லை. ஒரே பாணியில் கமர்ஷியல் படங்கள் எடுக்கும் இயக்குநர்களுக்குத்தான் அவர் சொல்லியிருந்தார். அவர் சொல்லியிருப்பது உண்மைதானே? வழக்கமான பாணியில் இல்லாமல் வித்தியாசமான டெம்ப்ளேட்டில் கமர்ஷியல் படங்களை எடுத்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா?’ என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் வெங்கட்பிரபு.

இதையும் வாசிக்கலாமே...

கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!

உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!

முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in