'மஞ்சுமல் பாய்ஸ்' போல 'J.பேபி' படமும் ஹிட் அடிக்கும்... அடித்துச் சொல்லும் வெங்கட்பிரபு!

ஜே.பேபி - மஞ்சுமல் பாய்ஸ்
ஜே.பேபி - மஞ்சுமல் பாய்ஸ்

'மஞ்சுமல் பாய்ஸ்' படத்தை தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடுவதை பார்க்கும்போது கலைக்கு மொழி முக்கியமில்லை. கன்டெண்ட்தான் முக்கியம்னு புரியுது. அந்த மாதிரி ஒரு படம்தான் ஜே.பேபி" என்று இயக்குநர் வெங்கட்பிரபு பாராட்டியுள்ளார்.

ஜே பேபி இசை வெளியீட்டு விழா
ஜே பேபி இசை வெளியீட்டு விழா

இயக்குநர் பா.இரஞ்சித்தின் 'நீலம் புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் சுரேஷ் மாரி இயக்கியுள்ள படம் 'J.பேபி'. ஊர்வசி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அட்டக்கத்தி தினேஷ், லொள்ளுசபா மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் வரும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தை 'சக்தி ஃபிலிம் ஃபேக்டரி' நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிலையில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெங்கட் பிரபு கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர், "ரஞ்சித் என்னிடம் சென்னை 28-ல கூட இருந்தார். அந்த டீம்லதான் இந்த படத்தோட சுரேஷ் மாரியும் இருந்தார். ரஞ்சித் அதுக்கு முன்னாடியே சில படங்கள்ல அசிஸ்டண்டா ஒர்க் பண்ணினாலும் நாங்கள்லாம் டீமா, குடும்பமா சேர்ந்து ஒர்க் பண்ண படம்னா அது சென்னை 28-தான். அடுத்து அவர் அட்டகத்தி படம் இயக்க போனப்போ நான் மங்காத்தா பண்ணிட்டிருந்தேன். அட்டகத்தி முடிச்சுட்டு அந்த படத்துக்கு ஒரு ஷோ ஏற்பாடு பண்ணோம்.

வெங்கட்பிரபு
வெங்கட்பிரபு

தயாரிப்பாளர், இயக்குநர் வெற்றிமாறன் சார் வந்து படத்தை அவ்ளோ என்ஜாய் பண்ணி பார்த்தார். அவர் அப்படி ரசிச்சதுதான், அந்த படத்தை ஞானவேல் ராஜா வாங்கி ரிலீஸ் பண்றதுக்கு முக்கிய காரணமா இருந்துச்சு. அந்த காலகட்டத்திலேருந்தே ரஞ்சித்தோட வளர்ச்சியை, அவர் டீமோட வளர்ச்சியை நான் பாத்துக்கிட்டிருக்கேன். அப்போ ஆரம்பிச்சு இப்போவரை நாங்க எல்லாரும் குடும்பமாத்தான் இருக்கோம். எங்க டீம்ல இருந்து ஒவ்வொருத்தரும் படம் இயக்கி வெற்றியடையறதை பார்க்கிறேன். அதுல பெருமையும் சந்தோஷமும் எனக்குத்தான் அதிகம். சுரேஷ் மாரியை பா.இரஞ்சித் அறிமுகப்படுத்துறது இன்னும் சந்தோஷமா இருக்கு.

இந்த ஜெ பேபி படத்தை நான் இன்னும் பார்க்கலை. என் வீட்ல பாத்து ரொம்ப என்ஜாய் பண்ணிருக்காங்க. இப்போ ‘மஞ்சுமல் பாய்ஸ்' படத்தை எல்லோரும் கொண்டாடிக்கிட்டிருக்காங்க. நம்ம தமிழ்நாட்ல அந்த படத்தை கொண்டாடுறதை பார்க்கிறப்போ கலைக்கு மொழி முக்கியமில்லை. கன்டெண்ட்தான் முக்கியம்னு புரியுது. அதே மாதிரியான படம்தான் இது. ஆனா, இதை ரொம்ப நாள் முன்னாடியே எடுத்துட்டாங்க.

ஊர்வசி மேடத்தை வெச்சு ஒரு படம் என்கிறப்போ அதுவே ஸ்பெஷல்தான். அவங்க அவ்ளோ பெரிய ஆர்டிஸ்ட்; அவ்ளோ பெரிய என்டர்டெயினர். நாம எல்லாருமே அவங்க ஃபேன்தான். படம் கண்டிப்பா ஃபன் ரைடாதான் இருக்கும். நல்ல படங்களை எடுக்குற ரஞ்சித்துக்கு நன்றியும் வாழ்த்தையும் சொல்லிக்கிறேன். இது எங்க குடும்பத்திலேருந்து வர்ற மற்றுமொரு படம். எல்லாரும் ஆதரவு தரணும்னு கேட்டுக்கிறேன்'' என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

தேர்தல் 2024 | மகனை ஸ்கூலுக்கு அனுப்பற மாதிரி ஜெயிலுக்கு அனுப்பிருக்காரு... நடிகர் வடிவேலு பேச்சு!

கனிமொழி எம்பி பங்கேற்ற கூட்டத்தில் போதை ஆசாமி ரகளை; வைரலாகும் வீடியோ!

இனி... 18 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை!

சவுரவ் கங்குலியின் பயோபிக் படத்தில் நடிகர் ரஜினி... குஷியில் ரசிகர்கள்! எகிறும் எதிர்பார்ப்பு!

பாஜக வேட்பாளரின் ஆபாச வீடியோ... ரவுண்ட் கட்டும் எதிர்கட்சிகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in