சொந்த ஊரிலேயே ஒதுக்கப்பட்டேன்... தீண்டாமை பாதிப்பு பற்றி பேசிய இயக்குநர் ரஞ்சித்!

இயக்குநர் பா. ரஞ்சித்
இயக்குநர் பா. ரஞ்சித்

தன் சொந்த ஊரிலேயே தீண்டாமையால் தான் ஒதுக்கி வைக்கப்பட்ட சம்பவம் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் வேதனையோடு பகிர்ந்திருக்கிறார். இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கொண்டாடி வருகிறது. இந்த நிகழ்வு ஒன்றில்தான் சிறு வயதில் தன் சொந்த ஊரிலேயே தீண்டாமை கொடுமையை அனுபவித்ததை இயக்குநர் ரஞ்சித் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் இரஞ்சித்
இயக்குநர் இரஞ்சித்

அவர் பேசியிருப்பதாவது, “என்னுடைய சொந்த ஊரில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். நாங்கள் தலித் என்பதால் அந்த கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள எங்களுக்கு அனுமதி கிடையாது. கோயில்ல மேளம் அடிக்கலாம். ஆனால் கோயில் உள்ளே போக முடியாது. அங்க கோலாகலமா தீமிதி திருவிழா நடக்கும். அங்க கட்டி வச்சுருக்கற கயிறு தாண்டி எங்களால திருவிழாவுக்கு உள்ள போக முடியாது.

இந்த தீண்டாமை எனக்குப் பிடிக்காததால நான் இந்த திருவிழாவில் கலந்துக்க மாட்டேன். ஆனால் நான் ஒன்பதாவது படிக்கும் போது எனக்கும் தீ மிதிக்க வேண்டும் என ஆசை வந்தது.

அதனால் எனக்கு மிகவும் பிடித்த கங்கை அம்மன் கோயிலில் காப்பு கட்டி தீ மிதிக்கலாம் என நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து முடிவு எடுத்து நாங்களே ஒரு மஞ்சள் கயிறை கட்டிக்கொண்டோம். இந்த வட்டம் பெரிதாகியது. தீமிதி அன்று காலனி மக்கள் அனைவரும் கோயிலை சுத்தம் செய்து தீ மிதிக்காக கட்டைகள் எல்லாம் எரிக்கிறார்கள்.

இயக்குநர் இரஞ்சித்
இயக்குநர் இரஞ்சித்

என்னுடைய அம்மா எனக்கு வீட்டில் இருக்கும் நகையை வச்சு எனக்கு அலங்காரம் செஞ்சாங்க. சுத்தி வந்த கோஷம், மோளம் அடிக்கும் சத்தம் எல்லாம் எனக்கு உற்சாகத்தை கொடுத்துச்சு. அந்த சந்தோஷத்துல மூன்று முறை சுத்தி சுத்தி வந்து தீ மிதிச்சேன். இது தான் ஒரு தலித் வாழ்க்கை. ஊர்ல தீ மிதிக்க ஒரு கதை இருக்கு. அதே போல காலனியில் தீ மிதித்ததுக்கு ஒரு கதை இருக்கு.

ஒவ்வொரு இடத்திலும் சாதி அப்பி இருக்கு. ஒரு பொதுவில் இருக்கும் நிலம், மரம் முதல் கடவுள் வரை உனக்கு கிடையாது என சொல்லும் போது அதை எதிர்த்து நான் ஒரு வாழ்க்கையை உருவாக்கினேன்” எனக் கூறியுள்ளார்.

 இதையும் வாசிக்கலாமே...

கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!

உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!

முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in