வெளிநாட்டவர் தந்த கைதட்டல்... உற்சாகத்தில் இயக்குநர் ராம், நடிகர் சூரி!

 ‘ஏழு கடல் ஏழு மலை’  படக்குழு...
‘ஏழு கடல் ஏழு மலை’ படக்குழு...

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்திற்கு உற்சாக வரவேற்புக் கிடைத்துள்ளது. இந்த விஷயம் படக்குழுவினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை அஞ்சலி
நடிகை அஞ்சலி

தங்கள் படம் மீது நம்பிக்கை வைத்துள்ள இயக்குநர்கள் படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி அங்கு திரையிடுகின்றனர். அங்கு கிடைக்கும் வரவேற்பு படத்திற்கு கூடுதல் மைலேஜாக அமைகிறது.

அப்படி இயல்பான படைப்புகளால் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம் அடுத்து ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தை வெளியிட இருக்கிறார். இதில் நடிகர்கள் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்தப் படத்தின் கிளிம்ப்ஸூம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.

சமீபத்தில் நடந்து முடிந்த ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன்' போட்டிப் பிரிவிற்காகத் தேர்வு செய்யப்பட்டு, ரோட்டர்டாம் நகரின் சிறப்புமிக்க பாதே சினிமாஸ் திரையரங்கில் மூன்று காட்சிகள் பொதுமக்களில் பார்வைக்காக இத்திரைப்படம் திரையிடப்பட்டது.

நடிகர் சூரி
நடிகர் சூரி

படம் திரையிடப்பட்டதும் அங்கிருந்த பார்வையாளர்கள் எழுந்து நின்று கைத்தட்டி உள்ளனர். இந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இப்படம் அமைந்துள்ளதாகவும் அங்கிருந்தவர்கள் பாராட்டியிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டிருப்பதால் சீரியஸான படம் இல்லை, வெகுஜனம் பார்த்து ரசிக்கலாம் எனக் கூறியுள்ள இயக்குநர் ராம் படம் வெளியாவது குறித்து விரைவில் அறிவிப்போம் எனவும் கூறியுள்ளார்.


இதையும் வாசிக்கலாமே...


கடன் தீர்க்கும்... அமாவாசை தினத்தில் இந்த மந்திரத்தைச் சொல்ல மறக்காதீங்க!

சென்னையில் பல இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை!

சட்டவிரோத மதரஸா, மசூதி இடிப்பு: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி; 250 பேர் படுகாயம்!

பிப்ரவரி 21ம் தேதி வரை நெல்லை வழிதடத்தில் இந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு... வீல்சேரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in