’பாகுபலி’ கதைக்குள் வந்த கிரிக்கெட்டர் தோனி... ராஜமவுலி பதில்!

’பாகுபலி’ கதைக்குள் வந்த கிரிக்கெட்டர் தோனி... ராஜமவுலி பதில்!

'பாகுபலி’ படத்தின் ப்ரீக்குவல் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு அண்மையில் வெளியானது. அதற்கான டிரெய்லரில் பாகுபலி கதாபாத்திரம் தோனி சாயலில் இருப்பது பற்றி ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ராஜமெளலி இயக்கத்தில் ஹிட்டான ‘பாகுபலி’ படத்தின் ப்ரீகுவல் அனிமேஷன் வடிவில் உருவாகி இருக்கிறது. மே 17 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில்  ‘பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்’ என்ற பெயரில் வெளியாகிறது. இதற்கான நிகழ்ச்சி கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.

அமேந்திர பாகுபலி
அமேந்திர பாகுபலி

அதில் ராஜமவுலி, படக்குழுவினர் என அனைவரும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் ‘பாகுபலி3’ உருவாக இருக்கிறது என்பதையும் உறுதி செய்து ரசிகர்களை குஷிப்படுத்தினார் ராஜமவுலி. நிகழ்வில் டிரெய்லர் பார்த்துவிட்டு படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதில் கதையின் நாயகனான அமேந்திர பாகுபலியின் அனிமேஷன் கதாபாத்திரம் கிரிக்கெட்டர் தோனி சாயலில் இருப்பதாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு இயக்குநர் ராஜமவுலி சிரித்துக் கொண்டே, “இந்த அனிமேஷன் கதாபாத்திரத்தை வடிவமைத்தவர் என்னைப் போலவே, தோனி ரசிகர் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

அமேந்திர பாகுபலியின் அனிமேஷன்
அமேந்திர பாகுபலியின் அனிமேஷன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in