ரூ. 500 கோடி பட்ஜெட்... கேமியோ ரோலில் களமிறங்கும் ராஜமவுலி!

ராஜமவுலி
ராஜமவுலி

இயக்குநர் ராஜமவுலி ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாராகும் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.

’மஹதீரா’, ‘பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ என ஆயிரம் கோடி பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ராஜமவுலி. ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்கள் வெளியீட்டுக்குப் பிறகு இதன் ப்ரீக்குவல் அனிமேஷன் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரும் மே 17ம் தேதி தொடராக வெளியாகிறது. ‘பாகுபலி’ படத்தின் மூன்றாம் பாகத்திற்கான வேலைகளிலும் பிஸியாகி வருகிறார் ராஜமவுலி.

பிரபாஸ்- ராஜமெளலி
பிரபாஸ்- ராஜமெளலி

இதுமட்டுமல்லாது, ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகும் என முன்பு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் மகேஷ்பாபுவுடன் புதிய படம் ஒன்றை இயக்குவதாக அறிவித்துள்ள நிலையில், அதற்கான பணிகளிலும் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில்தான் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் படத்தில் நடிக்கிறாராம் ராஜமவுலி.

இந்த செய்தி அவரது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. இதற்கு முன்பு ’பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ உள்ளிட்டப் படங்களிலும் கேமியோவில் நடித்திருந்தார் ராஜமவுலி. இப்போது பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன் என இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்கள் ஒன்று சேர்ந்திருக்கும் ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் தான் கேமியோவில் நடித்திருக்கிறாராம்.

பிரபாஸ்- ராஜமெளலி
பிரபாஸ்- ராஜமெளலி

நடிகர் பிரபாஸ் கேட்டுக் கொண்டதன் பேரில், அவர் மீதுள்ள அன்பு காரணமாக ஒத்துக் கொண்டிருக்கிறார் ராஜமவுலி. இதற்கு முன்பு பிரபாஸ் நடித்த ‘ராதே ஷ்யாம்’ படத்திலும் கேமியோவில் நடித்தார் ராஜமவுலி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


முடிதிருத்தும் கடையில் திடீரென நுழைந்த ராகுல் காந்தி; திக்குமுக்காடிப் போன ஊழியர்!

மும்பை பேனர் விழுந்த விபத்து.... பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு... இழப்பீடு அறிவிப்பு!

ஜெயிலுக்குப் போயும் நீ திருந்த மாட்டியா?... திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடிகை ராதிகா பாய்ச்சல்!

டெல்லியில் இருந்து சைக்கிளில் பயணம்... சேப்பாக்கத்தில் வெளியே கூடாரம்... தோனி ரசிகரின் வெறித்தனம்!

பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.80 லட்சம் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in