இயக்குநர் சேரன் மகளுக்குத் திருமணம்... திரையுலகினர் வாழ்த்து!

இயக்குநர் சேரன் மகளுக்குத் திருமணம்... திரையுலகினர் வாழ்த்து!

இயக்குநர், நடிகர் சேரனின் மூத்த மகளுக்குத் நேற்று முன் தினம் திருமணம் நடந்துள்ளது. இதில் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் திரளாகக் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இயக்குநர், நடிகர் எனப் பன்முகம் கொண்ட சேரனின் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கு சுரேஷ் ஆதித்யா என்பவருடன் நேற்று முன் தினம் சென்னை, மயிலாப்பூரில் திருமணம் நடந்துள்ளது.

இந்தத் திருமணத்தை இயக்குநர்கள் ரவிக்குமார், பாரதிராஜா, சீமான் ஆகியோர் முன்னின்று நடத்திக் கொடுத்துள்ளனர். தற்போது இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சேரன்.

திருமணத்தில் உறவினர்கள், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் திரளாகக் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 'வெற்றிக்கொடி கட்டு’, ‘பொற்காலம்’ போன்ற பல ஹிட் படங்களை இயக்கிய சேரன் நடிகராகவும் முத்திரை பதிக்க தவறவில்லை. சமீபத்தில் ‘குடிமகன்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

‘சேரன்ஸ் ஜர்னி’ என்ற சீரிஸை இயக்கி ஓடிடியிலும் தடம் பதித்தார். இப்போது கிச்சா சுதீப் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இதுமட்டுமல்லாது, பாமக தலைவர் ராமதாஸ் பயோபிக்கையும் இயக்க இருக்கிறார் சேரன்.

இதையும் வாசிக்கலாமே...


'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்ட இளைஞர் மீது திடீர் தாக்குதல்... கர்நாடகாவில் அடுத்த சம்பவம்!

அரசுப்பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து... ஒருவர் உயிரிழப்பு; 25 பேர் காயம்!

அவன் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்... ஆணவக் கொலை செய்யப்பட்டவரின் மனைவி எழுதிய கடிதம் சிக்கியது!

தேர்தல் முன்விரோதத்தில் இரட்டை கொலை... 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு!

சென்னையில் பரபரப்பு... ரூ.15 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in