விசாரணை நேர்மையாகத்தான் நடக்கிறது... தொழுகை முடிந்ததும் இயக்குநர் அமீர் பேட்டி!

இயக்குநர் அமீர்
இயக்குநர் அமீர்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீரின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருக்கும் நிலையில், ”நேற்று இரவு அமலாக்கத்துறை சோதனை முடிவடைந்தது. என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பு இல்லை என்பதை நிரூபிப்பேன். விசாரணைக்கு அழுத்தம் இருக்கிறதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது” என இயக்குநர் அமீர் மதுரையில் இன்று பேட்டி கொடுத்துள்ளார்.

அமீர்
அமீர்

போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இயக்குநர் அமீரிடம் நேரில் விசாரணை நடைபெற்ற நிலையில் நேற்று அவரது வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. ஜாபர் சாதிக்கிடமிருந்து அமீர் நான்கு கோடி ரூபாய் பெற்றுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அமலாக்கத்துறையின் சோதனை குறித்து இயக்குநர் அமீர் மதுரையில் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். மதுரையில் ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எல்லோருக்கும் ரமலான் வாழ்த்துகள்! அமலாக்கத்துறை விசாரணை 11 மணி நேரம் நடந்தது என்பது உண்மைதான். ஆனால், அதில் என்ன கேட்டார்கள் என்பது குறித்து சொல்ல முடியாது.

இயக்குநர் அமீர்
இயக்குநர் அமீர்

வீடு, அலுவலகங்களில் விசாரணை நடந்ததும் உண்மைதான். சில ஆவணங்கள் எடுத்துள்ளார்கள். அது என்ன என்பதை அவர்களே சொல்வார்கள். நான் சொல்வது சரியாக இருக்காது. எந்த விசாரணைக்கும் நான் தயாராகவே உள்ளேன். சமூகவலைதளங்களில் சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் எனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது என்பதை நிரூபிப்பேன். இறைவன் மிகப்பெரியவன். விசாரணை இன்னும் முழுமையடையாத நேரத்தில் இது பற்றி நான் அதிகம் பேசுவது சரியாக இருக்காது.

எல்லாப் பிரச்சினைகளையும் நான் எதிர்கொள்வேன். விசாரணை நேர்மையாகத் தான் நடக்கிறது. ஆனால், விசாரணைக்கு அழுத்தம் இருக்கிறதா இல்லையா என்பது தெரியது. எனக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். விரிவாக பேசுகிறேன்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...   


லாலுவின் 2 மகள்களுக்கு வாய்ப்பு... பீகாரில் 22 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது ஆர்ஜேடி!

சத்தீஸ்கரில் 50 அடி பள்ளத்திற்குள் பேருந்து கவிழ்ந்து 12 தொழிலாளர்கள் பலி... பிரதமர் மோடி இரங்கல்!

ஈபிஎஸ் நண்பர் வீட்டில் 7 மணி நேரம் ஐ.டி ரெய்டு...2 பெட்டிகளில் ஆவணங்களை அள்ளிச் சென்றனர்!

திருமாவளவன் வீட்டில் ஐ.டி அதிகாரிகள் திடீர் சோதனை...சிதம்பரத்தில் சிறுத்தைகள் குவிந்ததால் பரபரப்பு!

நள்ளிரவில் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு... கோவையில் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in