வாட்ஸ் அப்பில் இறக்கைக் கட்டிப் பறக்கும் தீபாவளி மீம்ஸ்கள்!

தீபாவளி மீம்ஸ்கள்
தீபாவளி மீம்ஸ்கள்
Updated on
2 min read

மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு எல்லாமே கன்டென்ட் தான். பார்ப்பதை கேட்பதை அப்படியே மீம்ஸ்களாக மாற்றி, தீபாவளி போனஸ், தலை தீபாவளி, புது பட ரிலீஸ் என்று சமூக வலைதளங்களில் தெறிக்க விடுகின்றனர்.

மீம்ஸ்
மீம்ஸ்

அவற்றில் அதிகம் பகிரப்படும் மீம்ஸ்கள் சில.... நம் வாசகர்களின் பார்வைக்கு..

வெடிப்பதற்கு இரண்டு மணி நேரம் மட்டும்தான். ஆனால் குடிப்பதற்கு பத்து மணி நேரம். ஊராடா இது? என்று கேட்பதில் ஆரம்பித்து பலவிதமான மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன

தீபாவளியை முன்னிட்டு  ஜவுளிக்கடைகளில் அதிகம் கேட்ட வாசகம் இந்த இரண்டு தான், இந்த டிசைன்ல வேற கலர் இருக்குதா? இந்த கலர்ல வேற டிசைன் இருக்குதா?

பணக்காரன் நகை வாங்கி தீபாவளி கொண்டாடுகிறான். ஏழையோ இருக்கும் நகையை அடகு வைத்து தீபாவளி கொண்டாடுகிறான்.

தீபாவளிக்கு ஆகும் செலவைப் பார்க்கும்போது, கிருஷ்ணர் நரகாசுரனை மன்னிச்சு விட்டுருக்கலாம் போல தோணுது.

மிஸ்டர் சின்னு,  தீபாவளிக்கு புது துணி உடுத்தி கோயிலுக்குப் போகிற நான் எங்கே? ஃபுல்லா குடித்துவிட்டு மட்டையாகிற நீ எங்கே? என்று தீபாவளியை  வைத்து மீம்ஸ்கள்  அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

மீம்ஸ்
மீம்ஸ்
மீம்ஸ்
மீம்ஸ்

அதைவிட அதிகமாக போனஸ் குறித்த மீம்ஸ்கள் தான் வலைதளங்களில் இறக்கை கட்டுகின்றன.

இப்பவே போனஸ் போட்டுட்டா ஒருத்தனும் வேலைக்கு வரமாட்டான், தீபாவளிக்கு முதல் நாள்தான் போடணும்  என்று தாத்தாவுக்கு பாயசத்தில் விஷம் வைத்த பாட்டி  சொல்வது போல ஒரு மீம்ஸ் வைரலாகிறது.

ஐயா எங்களுக்கு எவ்வளவு போனஸ் போடப் போறீங்க என்று கவுண்டமணி கேட்க, காது கேட்காத அவரது மாமனார் ஓ, நாளைக்கு ஊருக்கு போக போறீங்களா? என்று கேட்பது போல முதலாளி, தொழிலாளி  மீம்ஸ் வைரலாகியுள்ளது. 

தீபாவளி வேற நெருங்கிடிச்சு,  எங்களுக்கு எப்ப போனஸ் போடப் போறீங்க? என்று கமல் கேட்க  போனஸா, அப்படின்னா என்று ஜி.பி. முத்து கேட்பது போல ஒரு மீம்ஸ்.

மீம்ஸ்
மீம்ஸ்
மீம்ஸ்
மீம்ஸ்

தீபாவளிக்கு போனஸ் எப்படி? முன்னாடியே தந்து விடுவீங்களா,  இல்ல சம்பளத்தோட தான் வருமா? என்று வடிவேலு கேட்க,  முதல்ல உனக்கு தீபாவளிக்கு லீவு என்று யார் சொன்னா? என்று கவுண்டமணி பதில் சொல்கிறார்.

தீபாவளிக்கு இன்னும்  ஒரு நாள் தான் இருக்கு,  ஆனா ஊருக்கு போகாம கம்பெனியில் இருக்கியேப்பா,  எவ்வளவு சின்சியர் வொர்க்கர் நீ, என்று அர்ஜுன் கேட்க,  போனஸ் போட்டாத்தான்யா  ஊருக்கே போக முடியும் என்கிறார் வடிவேலு.

வடிவேலுவிடம் கிங்காங் தனக்கு கல்யாணம் என்று சொல்லும் காட்சியை வைத்து, அட்டை கம்பெனியில் வேலை பார்க்கும் அவர் தனக்கு 50 ஆயிரம் ரூபாய் போனஸ் வந்திருப்பதாக சொல்வதைக் கேட்டு வடிவேல் அதிர்ச்சியாவதைப்போல மீம்ஸ் தயாரித்துள்ளனர்

இப்படி தீபாவளியை முன் வைத்து நூற்றுக்கணக்கான மீம்ஸ்கள்  சமூக வலைதளங்களில் அலையடித்துக் கிடக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in