பிக் பாஸ் நிகழ்ச்சி தங்களுக்கு பெரும் மனஉளைச்சலைக் கொடுத்ததாக ஐஷூவின் தந்தை கூறியுள்ளார். மேலும், தங்கள் மகளுக்காக மீண்டும் பாசிட்டிவான கதவுகளைத் திறப்போம் என்றும் கூறியுள்ளார்.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் முடிந்திருக்கிறது. இதன் முந்தைய சீசனில் டான்ஸ் மாஸ்டர் அமீர் வைல்ட் கார்டு போட்டியாளராகக் கலந்து கொண்டார். இவரை அடுத்து இவரது தங்கையும் ஆறாவது சீசனில் நுழைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்த சில வாரங்களிலேயே விளையாட்டில் இருந்து திசை திரும்பி, சக போட்டியாளரான நிக்சனுடன் இவர் அத்துமீறி நடந்து கொண்ட சில விஷயங்கள் பேசுபொருளானது. இணையவெளியில் ஐஷூ மற்றும் அவரது குடும்பத்தைப் பற்றி நெகட்டிவான விஷயங்களும் பரப்பப்பட்டது.
மேலும், இறுதிப்போட்டி வரை ஐஷூ இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாதியிலேயே அவர் வெளியேறினார். வெளியே வந்த நெகட்டிவ் கமெண்ட்டால், ஐஷூவின் எதிர்காலம் இதற்கு மேல் பாதிக்கப்படக்கூடாது என அவரது குடும்பம்தான் அவரை வெளியேற்ற வைத்தது எனவும் அப்போது சொல்லப்பட்டது. வெளியே வந்தபிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது செயலுக்காக ஐஷூ வருத்தம் தெரிவித்தும் பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.
இப்போது யூடியூப் தளம் ஒன்றிற்கு ஐஷூவின் தந்தை அஷ்ரப் பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், “பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் போக வேண்டாம் என ஐஷூவை எவ்வளவோ தடுத்தோம். ஆனால், அவர் என் பேச்சைக் கேட்கவில்லை. எங்கள் குடும்பம் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருப்போம். நடனம் ஆடி வீடியோ போடுவோம். எல்லாமே பாசிடிவாகதான் இருந்தது. ஆனால், பிக் பாஸூக்குப் பிறகு எல்லாமே மாறியது. எங்களுக்கு வந்த விஷயங்கள் எல்லாமே நெகட்டிவாக இருந்தது. அதையெல்லாம் பார்த்து கடும் மன உளைச்சலுக்கு ஆளானோம். என் மகள் என்பதற்காக இல்லை, யார் குறித்தும் இவ்வளவு வன்மத்துடன் கமென்ட் செய்யாதீர்கள். ஐஷூவிற்கு புதிய கதவுகளை நான் திறந்து விடுவேன். இனிமேல் பாசிட்டிவாக இருப்போம்” எனக் கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரல்களை நசுக்க முயற்சிக்கிறது: கார்கே விளாசல்!
வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கு... நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்!
பிரசவம் நடந்த 2வது நாளில் தேர்வு... 23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண்!