’குக் வித் கோமாளி - 5’ போட்டியாளர்கள் லிஸ்ட்: ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நாயகி முதல் யூடியூப் பிரபலம் வரை!

’குக் வித் கோமாளி - 5’ போட்டியாளர்கள் லிஸ்ட்: ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நாயகி முதல் யூடியூப் பிரபலம் வரை!

’குக் வித் கோமாளி5’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் யார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் முதல் யூடியூப் பிரபலம் வரை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் முன்பே கணித்த லிஸ்ட்டை உறுதிப்படுத்தும்படி போட்டியாளர்கள் தேர்வு அமைந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் இந்த வாரம் முதல் அதாவது ஏப்ரல் 27 முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த ஐந்தாவது சீசனில் நடுவர்களில் ஒருவராக இருந்த செஃப் வெங்கடேஷ் பட் விலக, அவருக்குப் பதிலாக நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக, தாமுவுடன் களமிறங்கி இருக்கிறார்.

புகழ், சுனிதா, ராமர், குரேஷி, சரத் என சீனியர் கோமாளிகளும் வழக்கம் போல இந்த சீசனில் இடம்பிடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நாஞ்சில் விஜயன், ஷப்னம், ’செல்லம்மா’ சீரியல் நாயகி அன்சிதா, தொகுப்பாளினி கேமி ஆகியோர் புது கோமாளிகளாக என்ட்ரி கொடுத்துள்ளனர்.

நிகழ்ச்சி ஒளிபரப்பாக இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், இந்த சீசனின் போட்டியாளர்கள் யார் என்பதை நிகழ்ச்சி தரப்பு புரோமோ மூலம் ரசிகர்களுக்குத் தெரியப்படுத்தி இருக்கிறது. அதன்படி, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்1’ தொடரில் தனமாக ரசிகர்களைக் கவர்ந்த நடிகை சுஜிதா, ‘ப்ளூ ஸ்டார்’ புகழ் திவ்யா துரைசாமி, விடிவி கணேஷ், தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, யூடியூபர் இர்ஃபான், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

ஷாலின் ஜோயா
ஷாலின் ஜோயா

சமையலில் கலக்கும் சீனியர் குக், கவர்ச்சி நாயகி, காதல் கலாட்டாவுக்கு இளம் ஜோடி, நகைச்சுவைக்கு ஒருவர் என்ற ரீதியில்தான் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் தேர்வுக்கான பேட்டர்ன் அமைந்திருக்கும்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்2’ புகழ் வசந்த் சாய், ‘கண்ணகி’, ‘ராஜா மந்திரி’ படப்புகழ் ஷாலின் ஜோயா, ’இரட்டை ரோஜா’ சீரியல் புகழ் அக்‌ஷய் கமல், ’சூப்பர் சிங்கர்’ புகழ் பூஜா வெங்கட் என விஜய் டிவியின் வளர்ந்து வளரும் கலைஞர்களுக்கு போட்டியாளர்களாக வாய்ப்பு கொடுத்திருக்கிறது தொலைக்காட்சி தரப்பு. ஒவ்வொரு சீசனிலும் தவறாமல் கலந்து கொள்ளும் சிவாங்கி, பாலா போன்ற கோமாளிகள் இந்த முறை மிஸ்ஸிங்.

புது நடுவர், புது ஷோ டைரக்டர் என பல மாற்றங்களை சந்தித்துள்ளது இந்த ஐந்தாவது சீசன். வழக்கம் போல கலகலக்குமா அல்லது சொதப்புமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் வாசிக்கலாமே...

டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்!

துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்.... மஞ்சள் எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி!

சவுதி மன்னருக்கு திடீர் உடல்நலக்குறைவு... இப்போது எப்படியிருக்கிறார்?

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளம்பெண்... அதிர்ச்சி வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in